Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

"திமுககாரனை சீண்டி பாக்காதீங்க.. இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை..!" - கோவையை கலக்கும் போஸ்டர்ஸ்!

Chandrasekaran Updated:
Representative Image.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை கண்டித்து திமுக சார்பில் கோவையில் கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ள நிலையில், கோவை நகர் முழுவதும் திமுககாரனை சீண்டி பாக்காதீங்க.. எனும் வாசகத்துடன் போஸ்டர்ஸ் ஒட்டப்பட்டுள்ளன.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் அதிரடியாக கைது செய்ததே கடந்த மூன்று தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கோவையில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுக மூத்த நிர்வாகிகள் வீரமணி, டி ஆர் பாலு, ராசா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பலர் பங்கேற்கின்றனர். இன்று மாலை சிவானந்த காலனி பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கோவை மாநகரில் காந்திபுரம், சிவானந்த காலனி, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சிவானந்த காலனி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் "திமுக காரனை சீண்டி பாக்காதீங்க- இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை..." எனவும் மற்றொரு போஸ்டரில் #WE STAND with ANNAN VSB" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், கலைஞர் கருணாநிதி கூறிய "எங்கள யாரும் அடிக்க முடியாது- நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது" என ஒன்றிய அரசை குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில், பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், மிசா வழக்கின் போது எடுக்கப்பட்ட மு..ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்