Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

திருவனந்தபுரம் - காசர்கோடு வந்தே பாரத் ரயில்: எத்தனை மணிக்கு புறப்படும்? டிக்கெட் விலை எவ்வளவு? | Thiruvananthapuram - Kasaragod Vande Bharat Train

Nandhinipriya Ganeshan Updated:
திருவனந்தபுரம் - காசர்கோடு வந்தே பாரத் ரயில்: எத்தனை மணிக்கு புறப்படும்? டிக்கெட் விலை எவ்வளவு? | Thiruvananthapuram - Kasaragod Vande Bharat TrainRepresentative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே 'வந்தே பாரத் திட்டம்' என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. 

ஏப்ரல் 25.2023 அன்றிலிருந்து இந்தியாவின் 15வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதே பாதையில் செல்லும் மற்ற ரயில்களை விட 20.40 மணி நேரத்திற்கு முன்னதாகவே திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு சென்றடைந்துவிடுகிறது. இந்த பதிவில் திருவனந்தபுரம் - காசர்கோடு வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிபரங்களை பார்க்கலாம். 

வழி: 

இந்த ரயில் வாரத்தில் வியாழன் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்லும் இந்த ரயில் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திரிசூர், ஷோரனூர் ஜங்ஷன், கோழிக்கோடு, கண்ணூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பொதுவாக திருவனந்தபுரம் - காசர்கோடு [501 கி.மீ தூரம்] பயண நேரம் 10.45 மணி நேரம் ஆகும். ஆனால், வந்தே பாரத் வெறும் 8.05 மணி நேரத்தில் சென்றுவிடுகிறது. 

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

திருவனந்தபுரம் - காசர்கோடு [எண்: 20634]

 

காசர்கோடு - திருவனந்தபுரம் [எண்: 20633]

ஏப்ரல் 25, 2023

வியாழன் கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயங்கும்

501 கிமீ

8.05 மணி நேரம்

05.20 AM - 01.25 PM

 

02.30 PM - 10.35 PM

 

திருவனந்தபுரம் - காசர்கோடு வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை [எண்:20634]: 

தினமும் காலை 5.20 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 06.07 மணிக்கு கொல்லம் சென்ட்ரலையும், காலை 7.25 மணிக்கு கோட்டயம் சென்ட்ரலையும், காலை 8.17 -க்கு எர்ணாகுளம் டவுன் சென்ட்ரலையும், காலை 9.22 -க்கு திரிசூர் சென்ட்ரலையும், காலை 10.02 -க்கு ஷோரனூர் ஜங்ஷனையும், காலை 11.03 -க்கு கோழிக்கோடு சென்ட்ரலையும், மதியம் 12.03 -க்கு கண்ணுர் சென்ட்ரலையும் சென்றடையும். பின்னர், மதியம் 12.05 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு காசர்கோடு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.

திருவனந்தபுரம் - காசர்கோடு [எண்: 20634]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

திருவனந்தபுரம்

-

05.20 AM

கொல்லம்

06.07 AM

06.09 AM

கோட்டயம்

07.25 AM

07.27 AM

எர்ணாகுளம் டவுன்

08.17 AM

08.20 AM

திரிசூர் சென்ட்ரல்

09.22 AM

09.24 AM

 ஷோரனூர் ஜங்ஷன்

10.02 AM 10.04 AM

கோழிக்கோடு சென்ட்ரல்

11.03 AM 11.05 AM

கண்ணுர் சென்ட்ரல்

12.03 PM 12.05 PM

காசர்கோடு

01.25 PM -

 

காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில் நேர அட்டவனை [எண்:20633]:

மறுமார்க்கமாக காசர்கோடு ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10.35 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும்.

காசர்கோடு - திருவனந்தபுரம் [எண்: 20633]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

காசர்கோடு

-

02.30 PM

கண்ணுர் சென்ட்ரல்

03.28 PM

03.30 PM

கோழிக்கோடு சென்ட்ரல்

04.28 PM

04.30 PM

ஷோரனூர் ஜங்ஷன்

05.28 PM

05.30 PM

திரிசூர் சென்ட்ரல்

06.03 PM

06.05 PM

 எர்ணாகுளம் டவுன்

07.05 PM 07.08 PM

கோட்டயம்

08.00 PM 08.02 PM

கொல்லம்

09.18 PM 09.20 PM

காசர்கோடு

10.35 PM -


கட்டணம்: 

இந்த ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் பயண வகுப்பை பொறுத்து மாறுபடும். அதன்படி, இந்த வந்தே பாரத் ரயிலில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை செல்ல சேர் காரில் ரூ.1520 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.308 உணவு கட்டணமும் அடங்கும். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.2815 வசூலிக்கப்படுகிறது. இதில் 369 ரூபாய் உணவு கட்டணமும் அடங்கும்.

மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை செல்ல சேர் காரில் உணவு கட்டம் ரூ.379 சேர்த்து ரூ.1590 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் உணவு கட்டணம் ரூ.434 சேர்த்து ரூ.2880 கட்டணமாக வசூலிக்கப்படும். உணவு தேர்வு என்பது இந்த ரயிலில் பயணிகளின் விருப்பம்தான். டிக்கெட் புக் செய்யும் போதே உணவு ஆப்ஷன் வேண்டாம் என தேர்வு செய்துவிட்டால் ரயில் பயண கட்டணத்தில் உணவு கட்டணம் வசூலிக்கப்படாது.

 

 

வந்தே பாரத் ரயில்

உணவு கட்டணம் இல்லாமல்

உணவு கட்டணம் சேர்த்து

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

காசர்கோடு - திருவனந்தபுரம் [எண்: 20633]]

ரூ.1212

ரூ.2446

ரூ.1520

ரூ.2815

திருவனந்தபுரம் - காசர்கோடு [எண்: 20634]

ரூ.1211

ரூ.2446

ரூ.1590

ரூ.2880


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்