Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

காஷ்மீரில் நடந்த G20 summit நிகழ்ச்சியில் ராம் சரண் செய்த காரியம் | Ram Charan at G20 Summit Event

Priyanka Hochumin Updated:
காஷ்மீரில் நடந்த G20 summit நிகழ்ச்சியில் ராம் சரண் செய்த காரியம் | Ram Charan at G20 Summit EventRepresentative Image.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று நடந்த ஜி 20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் ராம் சரண் அவர்கள் கலந்துக் கொண்டார்.

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான "RRR" திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ராம் சரண் அவர்கள் உலகெங்கிலும் உள்ள மக்களால் அங்கீகரிக்கப்பட்டார். மேலும் இத்திரைப்படத்திற்காக கோல்டன் குளோப் விருது, விமர்சகர்கள் சாய்ஸ் விருது மற்றும் அகாடமி விருது போன்ற பல சர்வதேச விருதுகளைப் பெற்றார். அது மட்டும் இன்றி 'குட் மார்னிங் அமெரிக்கா' என்னும் அமெரிக்கா டிவி ஷோவில் பங்கேற்றது தெலுங்கு மற்றும் இந்தியன் சினிமாவிற்கு பெருமிதம் என்று அவரின் தந்தை சிரஞ்சீவி அவர்கள் கூறினார்.

காஷ்மீரில் மே 22 - மே 24 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது ஜி 20 சுற்றுலா பணிக்குழு கூட்டம். இதில் உலகின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார பாதுகாப்புக்கான திரைப்பட சுற்றுலா பற்றிய குழு விவாதம் நடைபெறும். இதை கூட்டத்தில் வடகிழக்கு பிராந்தியத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் (DoNER) ஜி கிஷன் ரெட்டி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ரேம் சரண் மற்றும் NITI ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோர் பங்கேற்றனர். 
ராம் சரண் அவர்கள் தனது காஷ்மீரில் தனது குழந்தை பருவ நிகழ்வுகளை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். மேலும் ஆஸ்கார் விருது வாங்கிய "நாட்டு நாட்டு" பாடலிற்கு மேடையில் கொரிய தூதர் சாங் ஜே-போக் உடன் சேர்ந்து நடனமாடினார். ராம் சரண் அவர்களை சந்தித்தது தனது கனவு நினைவாகிவிட்டது என்று கொரிய தூதர் கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்