Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டெல்லி - டேராடூன் வந்தே பாரத் ரயில்: புறப்படும் நேரம், டிக்கெட் விலை மற்றும் முழு விவரங்கள்..! | Delhi to Dehradun Vande Bharat Train

Gowthami Subramani Updated:
டெல்லி - டேராடூன் வந்தே பாரத் ரயில்: புறப்படும் நேரம், டிக்கெட் விலை மற்றும் முழு விவரங்கள்..! | Delhi to Dehradun Vande Bharat TrainRepresentative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆனது, இந்தியாவின் இரண்டாவது அதிவேக ரயில் ஆகும். முதலாவது இடத்தில் இருப்பது கதிமான் எக்ஸ்பிரஸ் ஆகும். வந்தே பாரத் ஆனது ரயில் 18 எனவும் அழைக்கப்படுகிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, Wi-Fi வசதி, GPS, ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.

மே 29, 2023 ஆம் நாள் முதல் இந்தியாவின் 17 ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையாக டெல்லி முதல் டேராடூன் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதே பாதையில் செல்லக்கூடிய மற்ற இரயில்களை விட மிக விரைவாகவே சென்றடைந்து விடுகிறது. இந்த பதிவில் டெல்லி - டேராடூன் வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிவரங்களைப் பார்க்கலாம்.

வழி

இந்த ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து வாரத்தில் மற்ற அனைத்து நாள்களும் இயக்கப்படுகிறது. டெல்லி - டேராடூன் செல்லும் இந்த வந்தே பாரத் ரயில் ஆனந்த் விஹார் டிஆர்எம், மீரட் சிட்டி, முசாபர் நகர், சஹரன்பூர், ரூர்க்கி, ஹரித்வார் ஜங்ஷன், உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். பொதுவாக டெல்லி – டேராடூன் பயண நேரம் ஆனது பயணம் செய்யும் இரயில்களைப் பொறுத்து மாறுபடும். அதன் படி 5 மணி 50 நிமிடங்கள் முதல் 11 மணி 55 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும். ஆனால், வந்தே பாரத் ரயில் 4 மணி 45 நிமிடத்திலேயே சென்று விடுகிறது.

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

டெல்லி - டேராடூன் [எண்: 22457]

 

டேராடூன் - டெல்லி [எண்: 22458]

மே 29, 2023

புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயங்கும்

302 கிமீ

4 மணி 45 நிமிடம்

05.50 PM – 10:35 PM

 

07.00 AM – 11:45 AM

 

டெல்லி - டேராடூன் வந்தே பாரத் நேர அட்டவணை [எண்: 22457]:

 

டெல்லி - டேராடூன் [எண்: 22457]

 

வந்தடையும் நேரம்

இரயில்வே நேரம்

புறப்படும் நேரம்

இரயில்வே நேரம்

டெல்லி (ஆனந்த் விஹார் டிஆர்எம்)

-

17:50

மீரட் சிட்டி

விரைவில் அப்டேட் செய்யப்படும்

18:38

முசாபர்நகர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

19:08

சஹரன்பூர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

19:55

ரூர்க்கி

விரைவில் அப்டேட் செய்யப்படும்

20:31

ஹரித்வார் ஜங்ஷன்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

21:15

டேராடூன்

22:35

-

 

டேராடூன் – டெல்லி வந்தே பாரத் நேர அட்டவணை [எண்: 22458]:

 

டேராடூன் – டெல்லி [எண்: 22458]

வந்தடையும் நேரம்

இரயில்வே நேரம்

புறப்படும் நேரம்

இரயில்வே நேரம்

டேராடூன்

-

07:00

ஹரித்வார் ஜங்ஷன்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

08:04

ரூர்க்கி

விரைவில் அப்டேட் செய்யப்படும்

08:49

சஹரன்பூர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

09:27

முசாபர்நகர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

10:07

மீரட் சிட்டி

விரைவில் அப்டேட் செய்யப்படும்

10:37

டெல்லி (ஆனந்த் விஹார் டிஆர்எம்)

11:45

-

 

கட்டணம்

டெல்லி - டேராடூன் [எண்: 22457] மற்றும் டேராடூன் – டெல்லி [எண்: 22458] போன்ற வந்தே பாரத் இரயில்களுக்கான டிக்கெட் கட்டணம் ஆனது பயண வகுப்புகளைப் பொறுத்தும், உணவுக் கட்டணத்தைப் பொறுத்தும் மாறுபடும். அதன் படி, டெல்லி-யில் இருந்து, டேராடூன் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலின் சேர் கார் மற்றும் எக்ஸ்கியூட்டிவ் கட்டணம் குறித்த் காண்போம்.

 

 

வந்தே பாரத் இரயில்

சேர் கார் கட்டணம்

எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு கட்டணம்

டெல்லி - டேராடூன் [எண்: 22457]

ரூ.1,065

ரூ.1,890

டேராடூன் - டெல்லி [எண்: 22458]

ரூ.1,065

ரூ.1,890


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்