Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

டெல்லி - வாரணாசி வந்தே பாரத் ரயில்: எத்தனை மணிக்கு புறப்படும்? டிக்கெட் விலை எவ்வளவு? | Delhi - Varanasi Vande Bharat Train

Nandhinipriya Ganeshan Updated:
டெல்லி - வாரணாசி வந்தே பாரத் ரயில்: எத்தனை மணிக்கு புறப்படும்? டிக்கெட் விலை எவ்வளவு? | Delhi - Varanasi Vande Bharat TrainRepresentative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே 'வந்தே பாரத் திட்டம்' என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. 

கடந்த பிப்ரவரி 18.2019 அன்று இந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்டது. இந்த ரயில் அதே பாதையில் செல்லும் மற்ற ரயில்களை விட 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே டெல்லியில் இருந்து வாரணாசி சென்றடைந்துவிடுகிறது. இந்த பதிவில் டெல்லி - வாரணாசி வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிபரங்களை பார்க்கலாம். 

வழி: 

இந்த ரயில் வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் தவிர பிற 5 நாட்களும் இயக்கப்படுகிறது. டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் இந்த ரயில் கான்பூர் மற்றும் அலகாபாத் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பொதுவாக டெல்லி - வாரணாசி [759 கி.மீ தூரம்] செல்ல பயண நேரம் 13 மணி நேரம் ஆகும். ஆனால், வந்தே பாரத் வெறும் 8 மணி நேரத்தில் சென்றுவிடுகிறது.

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

டெல்லி - வாரணாசி [எண்:22436]

 

வாரணாசி - டெல்லி [எண்:22435]

பிப்ரவரி 18,2019 திங்கள், வியாழன் தவிர அனைத்து நாளும் இயங்கும்.

662 கிமீ

8 மணி நேரம்

06.00 AM – 02.00 PM

 

03.00 PM – 11.00 PM

 

டெல்லி - வாரணாசி வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை [எண்:22436]:

தினமும் காலை 6 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10.08 மணிக்கு கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றடையும். காலை 10.10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12.08 மணிக்கு பிரயாக்ராஜ் சென்ட்ரல் ரயில் (அலகாபாத்) நிலையம் செல்லும். அங்கிருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு வாரணாசி ஜங்ஷனை வந்தடையும்.

டெல்லி - வாரணாசி [எண்: 22436]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

டெல்லி

-

06.00 AM

கான்பூர்

10.08 AM 10.10 AM
பிரயாக்ராஜ் சென்ட்ரல் (அலகாபாத்) 12.08 PM 12.10 AM
வாரணாசி  02.00 PM

-

 

வாரணாசி  - டெல்லி வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை [எண்:22435]:

மறுமார்க்கமாக வாரணாசி ஜங்சனில் இருந்து மதியம் 03.00 புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 04.35 மணிக்கு பிரக்யாராஜ் சென்ட்ரலை வந்தடைகிறது. பின்னர், மாலை 04.37க்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 06.30 மணிக்கு கான்பூர் சென்ட்ரலை வந்தடைகிறது. பின்னர், மாலை 06.32க்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.00 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தை வந்தடையும். 

வாரணாசி - டெல்லி [எண்: 22435]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

வாரணாசி

-

03.00 PM

பிரயாக்ராஜ் சென்ட்ரல் (அலகாபாத்)

04.35 PM 04.37 PM
 கான்பூர் 06.30 PM 06.32 PM
டெல்லி 11.00 PM

-


கட்டணம்: 

இந்த ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் பயண வகுப்பை பொறுத்து மாறுபடும். அதன்படி, இந்த வந்தே பாரத் ரயிலில் டெல்லி முதல் வாரணாசி வரை செல்ல சேர் காரில் ரூ.1805 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.344 உணவு கட்டணமும் அடங்கும். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.2394 வசூலிக்கப்படுகிறது. இதில் 399 ரூபாய் உணவு கட்டணமும் அடங்கும்.

மறுமார்க்கமாக, வாரணாசி முதல் டெல்லி வரை செல்ல சேர் காரில் உணவு கட்டம் ரூ.288 சேர்த்து ரூ.1750 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் உணவு கட்டணம் ரூ.349 சேர்த்து ரூ.3355 கட்டணமாக வசூலிக்கப்படும். உணவு தேர்வு என்பது இந்த ரயிலில் பயணிகளின் விருப்பம்தான். டிக்கெட் புக் செய்யும் போதே உணவு ஆப்ஷன் வேண்டாம் என தேர்வு செய்துவிட்டால் ரயில் பயண கட்டணத்தில் உணவு கட்டணம் வசூலிக்கப்படாது.

வந்தே பாரத் ரயில்

உணவு கட்டணம் இல்லாமல்

உணவு கட்டணம் சேர்த்து

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

டெல்லி - வாரணாசி [எண்:22436] 

ரூ.1461

ரூ.1995

ரூ.1805

ரூ.239

வாரணாசி - டெல்லி [எண்:22435]

ரூ.1462

ரூ.3006

ரூ.1750

ரூ.3355


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்