Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..!

madhankumar June 22, 2022 & 15:02 [IST]
இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..!Representative Image.

இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஏற்கனவே சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம் . முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது

இதன் தொடர்ச்சியாக இரண்டவது கட்டமாக பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும என அறிவிக்கப்பட்டு இருந்தது

அதன்படி இன்று வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கப்பலில் 14 ஆயிரத்து 700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மொத்தம் 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களுடன் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த கப்பலை அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று கொடியசைத்து அனுப்பி வைத்தனர் .. இதனை தொடர்ந்து மீதமுள்ள அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் அடுத்த சில தினங்களில் மற்றொரு கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்