Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

#Breaking அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்... என்ன துறை ஒதுக்கீடு தெரியுமா? 

KANIMOZHI Updated:
#Breaking அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்... என்ன துறை ஒதுக்கீடு தெரியுமா? Representative Image.

தமிழக அமைச்சரவையின் 35வது அமைச்சராக இன்று பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

2019ம் ஆண்டு முதல் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக செயல்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக வேட்பாளராக களமிறங்கினார். முதன் முறையாக போட்டியிட்ட தேர்தலிலேயே 67.89 சதவீத வாக்குகள் பெற்று 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

கடந்த ஆண்டு மே 11ம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின், இன்று முதல் தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்க தொடங்கியுள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். 

உதயநிதி ஸ்டாலின் எனும் நான்... என அமைச்சராக பொறுப்பேற்ற அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலமாக தமிழக அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு 10வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்