Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகர்களை நம்பி ஏமாறாதீர்கள்..டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை..!

madhankumar May 29, 2022 & 09:18 [IST]
நடிகர்களை நம்பி ஏமாறாதீர்கள்..டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை..!Representative Image.

நடிகர்கள் தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வர தொடங்கிவிட்டனர். இதனை நம்பி அதில் இறங்கி உங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பணத்தின் மீது ஆசை அதிகரித்து ஒரே இரவில் கோடிஸ்வரன் ஆகிவிடலாம், என்ற நம்பிக்கையில் பணத்தை ஆன்லைன் விளையாட்டுகளில் செலுத்தி மோசடிக்கு உள்ளாகி பின்னர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்துதான் வருகிறது. இந்த ஆன்லைன் விளையாட்டுகளானது விட்டதை பிடித்துவிடலாம் என மாயையை உருவாக்கி நம்மிடம் உள்ள அனைத்தையும் பிடுங்கிவிட்டுதான் செல்லும், இதனை அறியாமல் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

ரம்மி தடை:

ஏற்கனவே தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி பல உயிர்களை காவு வாங்கிவிட்டது என கூறி அதனை தடை செய்யவேண்டும் என போராட்டங்கள் நடத்தி அத்தனையும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அந்த நிறுவனங்களின் மேல் முறையீடு காரணமாக மீண்டு தமிழகத்திற்குள் நுழைந்து தனது வேலையை காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. 

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சாதாரண மக்கள் மட்டுமல்ல மக்களுக்கு அறிவுரை கூறவேண்டிய காவல்துறையை சேர்ந்த சில நபர்கள் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பங்குபெற்று தோல்வியடைந்து தனது வாழ்வை முறித்துக்கொள்கின்றனர்.

டிஜிபி சைலேந்திரபாபு அட்வைஸ்:

இந்நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்தர பாபு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உங்களுக்கு பிடித்த நடிகர்கள் தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கான விளம்பரத்தில் வருகின்றனர்,  வலைத்தளங்களில் அது குறித்த விளம்பரப்படங்கள் அடிக்கடி வந்தவண்ணம் உள்ளன. அதனை உண்மையென நம்பி அதில் சிக்கி உங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதீர்கள், என மக்களுக்கு அறிவுரை வழங்கி அந்த விடியோவை வெளியிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்