Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கட்டிப்பிடிக்குறதுல இத்தனை அர்த்தம் இருக்கா? | Types of Hugs for Lovers

Priyanka Hochumin Updated:
கட்டிப்பிடிக்குறதுல இத்தனை அர்த்தம் இருக்கா? | Types of Hugs for LoversRepresentative Image.

இந்திய கலாச்சாரப்படி திருமணம் ஆனவர்கள் மட்டுமே கட்டிபிடித்தல் சரியானது என்று கருதுகின்றனர். ஆனால் இந்த கால கட்டத்தில் தான் அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. நண்பர்கள், காதலர்கள், உறவினர்கள் என்று பலரும் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக கட்டிப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் இதற்காகவே காதலர் தினத்தின் முந்திய வாரத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி "Hug Day" கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் கட்டிப்பிடிக்கிறதில் எத்தனை வகைகள் மற்றும் அதன் அர்த்தம் என்னென்ன என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

கட்டிப்பிடிக்குறதுல இத்தனை அர்த்தம் இருக்கா? | Types of Hugs for LoversRepresentative Image

Bear Hug

இது ஒரு ஆரோக்கியமான உறவை குறிக்கும் கட்டிபிடித்தலாகும். நாம் எந்த ஒருவரை மிகவும் அதிகமாக நம்புகிறோமோ அவர்களுக்கு கடினமான கால காட்டம் அல்லது சங்கடம் இருக்கும் போது கட்டி அணைத்து ஆறுதல் சொல்லலாம். இது காமத்தை தாண்டி ஒருவர் மீது இருக்கும் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை குறிக்கும். இந்த கட்டிபிடித்தலுக்கான அர்த்தம் இது தான்.

கட்டிப்பிடிக்குறதுல இத்தனை அர்த்தம் இருக்கா? | Types of Hugs for LoversRepresentative Image

Back Hug

காதலின் உச்சத்தில் இருக்கும் தம்பதிகள் தன்னுடைய காதலரை பின்னாடி இருக்கும் கட்டிபிடித்தல் என்பது மிகவும் ஆழமாக அர்த்தத்தை தெரிவிக்கும் விதமாக அமையும். ஏனெனில் அவர்கள தங்கள் காதலருக்கு உறுதி மொழி அளிக்கிறார். என்ன நடந்தாலும் அவருக்கு எதுவும் நேர விடமாட்டேன் என்று கூறுவதாகும்.

கட்டிப்பிடிக்குறதுல இத்தனை அர்த்தம் இருக்கா? | Types of Hugs for LoversRepresentative Image

Friendly Hug

குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் இருப்பவர்களை இப்படி கட்டி அணைத்துக்கொண்டால் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அர்த்தம். எந்த சூழலிலும், எந்த துன்பங்களிலும் நான் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்பதை தெரிவிக்கும் விதமாக இருப்பது இந்த கட்டிபிடித்தலாகும்.

கட்டிப்பிடிக்குறதுல இத்தனை அர்த்தம் இருக்கா? | Types of Hugs for LoversRepresentative Image

Side Hug

இது முற்றிலும் முன் பின் தெரியாத அறிமுகமானவர்களுக்கானது. இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மற்றவரின் இடுப்பையோ அல்லது தோள்பட்டையோ கட்டி அணைத்தால் அதற்கு இது தான் அர்த்தம். இது முதன் முதலில் சந்திப்பவர்களுக்கு இடையில் இருக்கும் சங்கடமான தருணத்தை விலக்க உதவும்.

கட்டிப்பிடிக்குறதுல இத்தனை அர்த்தம் இருக்கா? | Types of Hugs for LoversRepresentative Image

Eye Contact Hug

காதலர்களுக்கு இடையில் இருக்கும் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக அமைவது தான் இந்த கட்டிபிடித்தலுக்கான அர்த்தம். தம்பதிகள் இருவரும்  மனதார ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் கட்டி அணைத்தல் இது. அதே போல தங்கள் காதலை வெளிப்படுத்த தம்பதிகள் ஒருவரின் ஒருவர் இடுப்பை கட்டிப் பிடித்திக்கொண்டால் அது தான் Waist Hug.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்