Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிற மொழி திணிப்பு என்பது கூடாது...துணை குடியரசு தலைவர்..!

madhankumar May 28, 2022 & 19:21 [IST]
பிற மொழி திணிப்பு என்பது கூடாது...துணை குடியரசு தலைவர்..!Representative Image.

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவ சிலையை திறந்து வாய்த்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, வருகை புரிந்தார். பின்னர் சிலையை திறந்துவைத்துவிட்டு சிறப்புரையாற்றிய அவர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே என தமிழில் தனது பேச்சை தொடங்கிய அவர், இந்தியாவில் ஆற்றல் வாய்ந்தவர்களில் முதன்மையானவர் கலைஞர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கலைஞரோடு உரையாடுவதை, விவாதிப்பதை நான் பெரிதும் விரும்பியிருக்கிறேன் என கூறினார்.

மேலும் அத்தனை கட்சிகளும் மக்களுக்காகதான் பணியாற்றுகின்றனர். அதனால், சிந்தாந்தங்கள் வேறாக இருந்தாலும் பணியாற்றும் விதம் வேறாக இருந்தாலும், யாரும் யாருக்கும் எதிரி அல்ல என்பதை தற்போதைய அரசியல்வாதிகள் புரிந்துக்கொள்ள வேண்டும் என கூறினார். மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும். மாநிலங்களின் வளர்ச்சியின்றி நாடு முன்னேற்றம் அடையாது. இதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என பேசினார்.

நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல. என் மொழிக்கு ஆதரவானவன். தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமையே நமது நாட்டின் சிறப்பு, எனவே மற்ற மொழிகளை ஒருவர் மீது திணிப்பது தவறானது, மொழித்திணிப்புக்கு நான் எதிரானவன் என்ற கருத்திற்கு மாற்றுக்கருத்து இல்லை, ஒவ்வொருவருக்கும் தாய் மொழி என்பது கண்பார்வைக்கு சமமாகும் என குறிப்பிட்டார். எந்த மொழியையும் அடக்கவோ, ஒடுக்கவோ கூடாது என கூறியுள்ளார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்