Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை...எதிரான வழக்கு தள்ளுபடி..?

madhankumar June 13, 2022 & 19:50 [IST]
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை...எதிரான வழக்கு தள்ளுபடி..?Representative Image.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாக பணியாற்றிவரும், ஷாலினி  என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நான், நீலகிரி மாவட்டம் கேரள எல்லையில் உள்ள சேரம்பாடி ஊரைச் சேர்ந்தவர். அங்கு 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்தேன். பின்னர் எனது ஊரில், 11 மற்றும் 12-ம் வகுப்புகள் தமிழ் வழியில் இல்லாததால் அருகிலுள்ள கேரளாவில் ஆங்கில வழிக்கல்வியில் படித்தேன்.

பின்னர் குரூப் 2 தேர்வு எழுதி உதவி சிறை அதிகாரியாக பணியாற்றிவருகிறேன், தற்போது சிறந்த பணி வாய்ப்பை பெற குரூப்-1 தேர்வு எழுதினேன். அப்போது தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க, தமிழக அரசின் புதிய சட்டதிருத்தத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் கேட்கப்பட்டது.

இந்த சட்டம் எனது அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது எனவே அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, பணிக்கான தகுதியுடைய படிப்பை, அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் தான் படித்திருக்க வேண்டும். அப்போதுதான் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியும் என கூறினார்.

பின்னர் ஏற்கனவே இதுகுறித்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என கூறினார். இதனையடுத்து இந்தவளாகும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்