Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மத்திய அரசிடம் சரண்டர் ஆன திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Baskaran Updated:
மத்திய அரசிடம் சரண்டர் ஆன திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு Representative Image.

சென்னை: பிரச்னைகளில் இருந்து மீளாமுடியாத திமுக மத்திய அரசிடம் சரணகதி அடைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தானே நீதிபதியாக மாறி முன்னாள் அமைச்சர்களை குற்றவாளி என குறிப்பிடுகிறார் முதல்வர் ஸ்டாலின். தன் குடும்பம் மீதும், சக அமைச்சர்கள் மீதும் உள்ள குற்றச்சாட்டுகளை மறைக்க முதல்வர் ஸ்டாலின் முயல்கிறார். ஊழலின் ஊற்றுக் கண்ணாக திமுகவினர் மற்றவர்களைப் பார்த்து ஊழல்வாதிகள் என குறிப்பிடுகின்றனர்.

தங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து மீள மத்திய அரசிடம் சரணாகதி படலத்தை துவக்கி உள்ளனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி மீது பொய் வழக்கு போட்டுவிட்டு குற்றவாளி என முதல்வர் கூறுகிறார். திமுக வழக்கறிஞர்களையே அரசு வழக்கறிஞர்களாக நியமித்து வாதாடி, உலகமே வியக்கும் வகையில் ஒருசில அமைச்சர்கள் தற்போது விடுதலையாகி வருவதை தமிழக மக்கள் கடுங்கோபத்துடன் பார்த்து வருகின்றனர்.

முதலில், விடியா ஆட்சியின் தற்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை அரசியல் கட்சி சார்பற்ற நேர்மையான வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து, நேர்மையாக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளுங்கள். மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும் முன் நீங்களும், உங்கள் சகாக்களும் உத்தமர்களா? என்று சிந்திக்கவும். “உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்” என்பது போல், அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் போது, உங்கள் அனைவருடைய வழக்குகளும் மீண்டும் திறக்கப்பட்டு, மேல் விசாரணை நடத்தப்பட்டு, சட்டத்தின் முன் நிற்கும் காலம் விரைவில் வரும் என்று விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன்.

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சட்டத் துறை அமைச்சரே, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு அமைச்சர். அவர், தன் மீதான வழக்குகளை அரசியல் கட்சி சார்பற்ற நேர்மையான வழக்கறிஞர்களை வைத்து விசாரணையை விரைவுபடுத்துவாரா?. மாநில சுயாட்சி, திராவிட மாடல் போன்ற உருட்டுகள் எதற்கு?

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, ஸ்டாலினால் குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை, விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளது. கைதி எண் பெற்று சிறைத் துறை காவலில் உள்ள ஒருவரை துறையில்லா அமைச்சர் என்று ஸ்டாலின் அறிவித்தது ஏன்?

மக்கள், ஆட்சி அமைப்பதற்காக அளித்த அதிகாரத்தைக் கொண்டு, மக்களுக்கு நல்லாட்சியை வழங்க வக்கில்லாத இந்த விடியா அரசு, வரி உயர்வு, கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு என்று மக்கள் விரோத நடவடிக் டிக்கைகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்