Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண் அரசியல்வாதிகள் விலைமாதுக்களா.. திமுக பேச்சாளர் சர்ச்சை பேச்சு!!

Sekar June 21, 2022 & 14:50 [IST]
பெண் அரசியல்வாதிகள் விலைமாதுக்களா.. திமுக பேச்சாளர் சர்ச்சை பேச்சு!!Representative Image.

கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் திமுகவின் ஓராண்டு முடிவை ஒட்டி நடந்த திமுகவின் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் பாஜக பெண் நிர்வாகிகளை மிகவும் ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் திமுகவின் ஓராண்டு சாதனை மற்றும் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சென்னை ராமாபுரத்தில் திமுகவின் மாணவரணி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் பேசிய திமுக பேச்சாளர் சாதிக் என்பவர் கரகாட்டக்காரன் படத்தில் வரும் சொப்பன சுந்தரி காமெடியை ஒப்பிட்டு அதிமுக தற்போது யாரிடம் இருக்கிறது என அக்கட்சியில் இருக்கும் தொண்டர்களுக்கே தெரியவில்லை எனக் கூறி முகம் சுளிக்க வைத்தார். 

மேலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அமித்ஷா  திராவிட கழகமாக மாறி 5 வருடங்கள் ஆகிறது என்று விளாசிய சாதிக், சட்டமன்றத்தில் வெறும் 4 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு நாங்கள் தான் எதிர்க்கட்சிகள் என அண்ணாமலை வாய்ச்சவடால் விடுவதாக வறுத்தெடுத்தார்.

தேமுதிகவையும் விட்டு வைக்காத சாதிக், விஜயகாந்த் மதுவுக்கு அடிமையானவர் என்று பேசினார். மேலும் வீட்டில் விளக்கு ஏற்றுங்கள், மணி அடியுங்கள் என கொரோனா காலத்தில் பாஜகவினர் கலர் கலராக ரீல் சுற்றியதாகவும், ஆனால், இப்போதும் வடமாநிலங்களில் கொரோனா அதிகமாக இருக்கிறது. தலைவர் ஸ்டாலின் அரசு தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தியதன் எதிரொலியாகவே தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததிருக்கிறது எனக் கூறினார். 

இத்தோடு நின்றிருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் பாஜக பெண் நிர்வாகிகளான நடிகைகள் குஷ்பூ, காயத்ரி ரகுராம், நமீதா மற்றும் கவுதமி ஆகியோரின் பெயர்களை வெளிப்படையாக குறிப்பிட்டு விலைமாதுக்களோடு ஒப்பிட்டு பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசி அவருக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பியுனார். இவரது பேச்சு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்களே தற்போது பொதுமேடையில் எதிர்கட்சித் தலைவர்களை ஒருமையில் தரம் தாழ்ந்து விமர்சிப்பது வாடிக்கையாகி இருந்தாலும், அரசியலில் பெண்கள் தடம் பதிப்பதே அபூர்வம் எனும் சூழலில், குறிப்பாக பெண்ணியம் பேசும் திமுகவைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் மேடையிலேயே பெண் அரசியல்வாதிகளை விபச்சாரிகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்தியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவினரின் தரம் தாழ்ந்த பேச்சுக்கள் தற்போது எல்லை மீறி போய்க்கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு இதை கட்டுப்படுத்தாவிடில் நிலைமை மோசமாகிவிடும் என கட்சித் தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்