Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மக்கள் ஆட்சி காலத்தில் நடக்கும் மன்னராட்சி தான் திமுக ஆட்சி - சீமான் விமர்சனம்

Baskaran Updated:
மக்கள் ஆட்சி காலத்தில் நடக்கும் மன்னராட்சி தான் திமுக ஆட்சி - சீமான் விமர்சனம்Representative Image.

தூத்துக்குடி: திமுக ஆட்சி என்பது மக்கள் ஆட்சி காலத்தில் நடக்கும் மன்னர் ஆட்சி பாட்டன்,தாத்தா, அப்பா மகன் இப்படி வாரிசுபடியான அரசியல்தான் நடக்கும் ஆகையினால் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வரட்டும் என  நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, வருமானவரி சோதனை என்பது தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடக்கும் வழக்கமான ஒன்று தான். இன்னும் நாளாக நாளாக அதிகமாக நடக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது என்பது தவறாக ஒன்றும் பேசவில்லை. கலைஞர் பிறந்தநாளை ஓறாண்டு கொண்டாட வேண்டும் என்பதற்கு காசு எங்கே இருந்து வருகின்றது.

நாட்டில் இருக்கின்ற அத்தனை தீய திட்டத்திற்கும் வேர் தேடி போனால் அது திமுக-வில் தான் இருக்கின்றது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் ஓராண்டு முழுவதும் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது அதுவும் மக்கள் பணத்தில். கருணாநிதியை போல் இன துரோகம் செய்த தலைவர்கள் யாரும் உண்டா?தமிழ்நாட்டில் அண்ணாவிற்கு பிறகு ஊழல்,மது வருவதற்கு காரணம் யார் எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் கருணாநிதிக்கு மார்பளவுக்குச் சிலையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் திருமண மண்டபம், பேனா வைத்தால் மட்டும் கருணாநிதி புனிதர் ஆகிவிடுவாரா? ஈடில்லா ஆட்சி அதற்கு இராண்டுடே சாட்சி  என்று சொல்லிக்கொண்டு திரியும் திமுகவில் அமைச்சர் உதயநிதி துணை முதல்வர் ஆனால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. திமுக ஆட்சி என்பது மக்கள் ஆட்சி காலத்தில் நடக்கும் மன்னர் ஆட்சி பாட்டன்,தாத்தா,அப்பா மகன் இப்படி வாரிசுபடியான அரசியல்தான் நடக்கும் என்று  நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்