Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'திமுகவின் ஏஜென்ட் அண்ணாமலை' - முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பகிரங்கக் குற்றச்சாட்டு!

Saraswathi Updated:
'திமுகவின் ஏஜென்ட் அண்ணாமலை' - முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பகிரங்கக் குற்றச்சாட்டு!Representative Image.

தமிழகத்தில் அதிமுக கூட்டணி பிடிக்கவில்லை என்றால் போக வேண்டியதுதானே? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், "ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு எந்த தராதரமும் யோக்கியதையும் அண்ணாமலைக்கு இல்லை. ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் அண்ணாமலை என்றார்.

தொடர்ந்து பேசிய சிவி சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினராகவோ சட்டமன்ற உறுப்பினராகவோ கவுன்சிலராகக்கூட பதவி வகிக்காத அண்ணாமலை, மாநில தலைவராக பொறுப்புக்கு வந்துள்ளார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அவரது கட்சியை சேர்ந்தவர்களே கூறியுள்ளார்கள். கொலை, கொள்ளை செய்யக்கூடிய சாராயம் விற்கக்கூடிய சமூகவிரோதிகளை கட்சியில் பணம் பெற்றுக் கொண்டு சேர்க்க கூடியவர்தான் அண்ணாமலை.

நரேந்திர மோடியாக இருந்தாலும் போயஸ் கார்டனுக்கு தேடிவந்து அம்மாவை சந்தித்த வரலாறுதான் உள்ளது. அந்த அம்மாவை பற்றி குறைகூறுவதற்கும், ஊழல் பற்றி பேசுவதற்கும் பாஜகவிற்கு அருகதை கிடையாது.  அதிமுகதான் பெரிய கட்சி. அவர்கள் தலைமையில் கூட்டணி தொடரும் என்று ஜே பி நட்டா அமித்ஷா ஆகியோர் அண்ணாமலையை அருகில் வைத்துக் கொண்டே சொல்லி இருக்கிறார்கள். 

அண்ணாமலையை அருகில் வைத்துக் கொண்டே இப்படி சொல்லி இருக்கிறார்கள் என்றால் அண்ணாமலைக்கு தலையில் குட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி சொல்லி இருக்கிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று அன்றைக்கு சொன்னபோது எங்கே வாய் வைத்துக் கொண்டு இருந்தீர்கள்.? பாஜக திமுகவோடு கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் திமுக உடைய ஏஜென்ட் ஆக  அண்ணாமலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பல்வேறு உதாரணங்களை எங்களால் சொல்ல முடியும். இரண்டு நாட்களுக்கு முன்பு உதயநிதி பேசியதை வழிமொழிந்து அண்ணாமலை பேட்டி கொடுத்திருக்கிறார்.அப்படியானால் திமுக என்ன சொல்கிறதோ அதை செயல்படுத்தக்கூடிய இடத்தில்தான் அண்ணாமலை இருக்கிறார்.

செந்தில்பாலாஜி மீது வருமானவரித்துறை சோதனை வரும்போது அந்த தகவலை செந்தில் பாலாஜிக்கு சொன்னது யார்? பாஜகவின் கொள்கைகளை செயல்படுத்தாமல் அண்ணாமலை தனது தனிப்பட்ட சிந்தனையை கருத்தாக கூறி வருகிறார். அதிமுக புடிக்கலன்னா போக வேண்டியது தானே? என்றும் அப்போது அவர் காட்டமாகப் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்