Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

1 டிஎம்சி நீர் என்பது எத்தனை ஆயிரம் லிட்டர் தெரியுமா? மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு இதுதான்.!

madhankumar August 04, 2022 & 09:59 [IST]
1 டிஎம்சி நீர் என்பது எத்தனை ஆயிரம் லிட்டர் தெரியுமா? மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு இதுதான்.!Representative Image.

ஆயிரம் மில்லியன் கியூபிக் ஃபீட் என்பதின் சுருக்க வடிவமே டிஎம்சி. 1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீ ருக்கு சமம். 1 டிஎம்சி என்பது 2,830 கோடி லிட்டர் தண்ணீ ர் ஆகும். 1 டிஎம்சி தண்ணீர் கிடைத்தாலே சென்னை மாநகர் முழுவதும் ஒரு மாதத்துக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு டி.எம்.சி தண்ணீரை சேமிக்க வேண்டுமென்றால்  12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும்.

அதுபோல ஒரு டி.எம்.சி தண்ணீரை 1லிட்டர் பாட்டிலில் போட்டு ரூ .20 என்று விற்பனை செய்தால், ஏறக்குறைய ரூ .56 கோடிக்கு விற்பனை செய்யலாம்.

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையின் மொத்த நீர் கொள்ளவு 45.05 டிஎம்சி ஆகும் . மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 93.4 டிஎம்சி ஆகும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் 2 கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு ஒப்பானது மேட்டூர் அணை ஆகும்.

இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மிகப்பெரிய அணையாக இருப்பது மேட்டூர் அணை தான். மேட்டூர் அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டு சரியாக 9 ஆண்டுகளுக்கு பிறகு தான் பணி நிறைவடைந்தது. 1934ம் ஆண்டு இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. மேட்டூர் அணை சுமார் 1,700 மீட்டர் பரப்பளவு கொண்டது. தமிழகத்தின் சுமார் 12 -க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

தற்போது கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்