Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கரண்ட் இல்ல.. டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை.. உ.பி. மருத்துவனை அவலம்!!

Sekar September 12, 2022 & 18:46 [IST]
கரண்ட் இல்ல.. டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை.. உ.பி. மருத்துவனை அவலம்!!Representative Image.

உத்தரபிரதேசத்தின் பல்லியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் மொபைல் டார்ச் விளக்குகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு மருத்துவர் ஒரு பெண் நோயாளியை ஸ்ட்ரெச்சரில் வைத்து பரிசோதிப்பதும், மற்றவர்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதையும் காட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் தலைமைப் பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.டி.ராம் கூறுகையில், ஜெனரேட்டருக்கான பேட்டரிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மருத்துவமனையில் மின்சார பேக்கப் எடுக்க ஜெனரேட்டர் இருப்பதாகவும் ஆனால் பேட்டரிகளைப் பெறுவதற்கு நேரம் எடுத்ததாகவும் அவர் கூறினார். 

ஜெனரேட்டரில் பேட்டரி இல்லாமல் இருப்பது ஏன் என்று கேட்டதற்கு, "எப்போதுமே பேட்டரிகள் திருடுபோகும் என்ற அச்சம் உள்ளது. அதனால் பயன்பாட்டில் இல்லாதபோது அவை அகற்றப்படுகின்றன" என்றார்.

பல்லியாவில் வார இறுதியில் பலத்த மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல நோயாளிகள் கூறுகையில், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவது தினசரி வாடிக்கையாகி விட்டதாகவும், மருத்துவமனை நிர்வாகம் பொதுவாக ஜெனரேட்டரைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்