Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விசாரணைக்கு உகந்தது.. மற்றொரு அயோத்தியாக மாறுகிறதா ஞானவாபி மசூதி வழக்கு?

Sekar September 12, 2022 & 17:02 [IST]
விசாரணைக்கு உகந்தது.. மற்றொரு அயோத்தியாக மாறுகிறதா ஞானவாபி மசூதி வழக்கு?Representative Image.

ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் அமைந்துள்ள இந்து சிலைகளை தினசரி வழிபட அனுமதிக்கக் கோரிய மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது. எனினும் கோவிலில் வழிபாடு நடத்த உரிமை கோரிய மனுவை தொடர்ந்து விசாரிக்கும் என மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் உத்தரவிட்டார்.

மசூதி வளாகத்தில் தினசரி இந்து தெய்வங்களை வழிபடும் உரிமையைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தக்கவைக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளதால், ஞானவாபி-ஸ்ரீங்கர் கௌரி வழக்கு மற்றொரு ராமர் கோயில் இயக்கமாக மாறுமா? எனும் பரபரப்பு எழுந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் அர்த்தம் என்ன? அடுத்து என்ன நடக்கும்?

முதலாவதாக, நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று தீர்ப்பளித்த பிறகு, வளாகத்தில் உள்ள சிருங்கர் கௌரி மற்றும் பிற தெய்வங்களை வழிபட அனுமதி கோரிய இந்துக்கள் தரப்புகளின் மனு மீதான விசாரணை தொடரும். தினசரி பூஜைக்கான மனு செப்டம்பர் 22ஆம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முஸ்லீம் தரப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகவுள்ளது. இந்துக்கள் தரப்பு மேலும் இந்திய தொல்லியல் துறை கணக்கெடுப்பு மற்றும் சிவலிங்கத்தின் காலத்தை அறிய கார்பன் டேட்டிங் செய்ய முயல்கிறது.

ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிலைகள் இருப்பதாகக் கூறப்படும் இந்து தெய்வங்களை தினசரி வழிபட அனுமதிக்கக் கோரி ஐந்து பெண்கள் மனு தாக்கல் செய்தனர். அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி, ஞானவாபி மசூதி ஒரு வக்ஃப் சொத்து என்று கூறியது மற்றும் மனுவின் விசாரணை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. 

சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த வழக்கில், முன்னதாக கடந்த மாதம் விசாரணையின்போது செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு மாவட்ட நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 22-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்து தரப்பு வழக்கறிஞர் மதன் மோகன் யாதவ், கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டது என்று கூறியிருந்தார். முன்னதாக, இந்த வளாகத்தை வீடியோகிராஃபிக் ஆய்வு செய்ய கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மே 16ஆம் தேதி கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து, மே 19ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஞானவாபி மசூதி- ஷிரிங்கர் கவுரி வளாகத்தில் வீடியோ கிராஃபிக் சர்வேயின் போது சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்து தரப்பு கீழ் நீதிமன்றத்தில் கூறியது. ஆனால் முஸ்லீம் தரப்பில் சர்ச்சையாக மாறியது.

முன்னதாக, மே 20 அன்று உச்ச நீதிமன்றம் வழக்கை சிவில் நீதிபதியிலிருந்து (மூத்த பிரிவு) மாவட்ட நீதிபதிக்கு மாற்றியது. முஸ்லீம்கள் மசூதிக்குள் நமாஸ் அல்லது மத அனுஷ்டானங்களைச் செய்வதற்கு எந்தவிதமான தடையும் விதிக்கப்படக்கூடாது என்றும் உச்சநீதிமன்ற அமர்வு கூறியது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்