Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சவுக்கு சங்கர் டிஸ்மிஸ்.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

Sekar September 24, 2022 & 18:20 [IST]
சவுக்கு சங்கர் டிஸ்மிஸ்.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!Representative Image.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அரசு பணியிலிருந்து சஸ்பெண்ட் ஆகி இருந்த நிலையில், அவரை விரைவில் டிஸ்மிஸ் செய்ய தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிகிறது.

தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர், அரசு ஆவணங்களை பொதுவெளியில் கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 2008 ஆம் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவர் சவுக்கு என்ற பெயரில் இணையதள ஊடகம் தொங்கி, அரசுக்கு எதிராக தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். 

இது மக்களிடையே பிரபலமாக, சவுக்கு என்ற அடைமொழியுடன் சவுக்கு சங்கராகவே வலம் வந்து பல்வேறு யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து வந்தார். அவர் தொடர்ந்து அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை பெற்று தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 2008ஆம் ஆண்டு அரசு ஆவணங்களை கசிய விட்ட விவகாரத்தில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர் மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அரசு தற்போது வரை அவருக்கு மாதம் ரூ.40,000 ஊதியமாக வழங்கி வந்தது. 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் போது இதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு அரசு எப்படி சம்பளம் வழங்கி வருகிறது என்று கேள்வி எழுப்பியதோடு, அவரை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் பணிபுரிந்த லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு டிஸ்மிஸ் செய்வதற்கான ஷோ காஸ் நோட்டீசை வழங்கினர். 

அந்த நோட்டிஸை வாங்க சவுக்கு சங்கர் மறுத்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் அடைக்கப்பட்டிருக்கும் சிறையின் அறை வாசலில் நோட்டிஸ் ஒட்டப்பட்டது. ஷோ காஸ் நோட்டிஸ் வழங்கப்பட்டு விட்டதால் கூடிய விரைவில் அவர் தனது பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்