Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்று காதலர்களுக்கான வாக்குறுதி தினம்! இந்த தினம் ஏன் அவ்வளவு முக்கியம் தெரியுமா..? Promise Day History in Tamil

Gowthami Subramani Updated:
இன்று காதலர்களுக்கான வாக்குறுதி தினம்! இந்த தினம் ஏன் அவ்வளவு முக்கியம் தெரியுமா..? Promise Day History in TamilRepresentative Image.

உலகத்தில் அப்பா, அம்மா, அண்ணா என எந்த உறவுகளுக்கிடையேயும் சத்தியம் என்ற வார்த்தை வந்திருக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், காதலிப்பவர்களுக்கிடையே வாழ்நாளில் ஒருமுறையாவது சத்தியம் என்பது கட்டாயம் இருக்கும் அல்லது இருந்திருக்கும். நாம் ஒருவரை ஆத்மார்த்தமாக நம்பும் போது, அவர் செய்யக் கூடிய சிறிய தவறாக இருப்பினும் அதற்கு கட்டாயம் வாக்குறுதியைக் கேட்பது உறுதி. இது அவர்களது உறவை வலுவாக்கும் என்றும் கூறலாம். காதலர்களுக்கிடையேயான காதலை வலுப்படுத்தும் விதமாக அமையும், இந்த தினத்தைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இன்று காதலர்களுக்கான வாக்குறுதி தினம்! இந்த தினம் ஏன் அவ்வளவு முக்கியம் தெரியுமா..? Promise Day History in TamilRepresentative Image

வாக்குறுதி தினம் 2023 தேதி

காதலர் வாரத்தில் ஐந்தாம் தினமாகக் கொண்டாடப்படுவது இந்த வாக்குறுதி தினமே. இந்த தினமானது காதலர்கள் தங்களுக்குள் உள்ள பிணைப்பை இறுகப்படுத்தும் விதமாக, தனது அன்பானவர்களுக்கு தங்களால் முடிந்த வாக்குறுதிகளை அளிப்பது ஆகும். இந்த 2023 ஆம் ஆண்டு வாக்குறுதி தினம் பிப்ரவரி 11, 2023 சனிக்கிழமை வருகிறது.
 

இன்று காதலர்களுக்கான வாக்குறுதி தினம்! இந்த தினம் ஏன் அவ்வளவு முக்கியம் தெரியுமா..? Promise Day History in TamilRepresentative Image

வாக்குறுதி நாள் 2023 வரலாறு

வாக்குறுதி தினமானது ஆண்டுதோறும் பிப்ரவரி 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது உலக வாக்குறுதி தினமாகக் கருதப்படாது. காதலர்களுக்காக, காதலர் வாரத்தின் ஒரு பகுதியாக வருவதாகும். இது நமது கூட்டாளர்களுடன் வலுவான பிணைப்பை உருவாக்கப் பயன்படுகிறது. எல்லா வருடங்களிலுமே, காதலர் தினத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னரே, இந்த வாக்குறுதி தினம் கொண்டாடப்படுகிறது.
 

இன்று காதலர்களுக்கான வாக்குறுதி தினம்! இந்த தினம் ஏன் அவ்வளவு முக்கியம் தெரியுமா..? Promise Day History in TamilRepresentative Image

வாக்குறுதி நாள் 2023 முக்கியத்துவம்

வாக்குறுதி தினத்திற்கு தனி ஒரு முக்கியத்துவம் உள்ளது. இது ஒருவர் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமையும். ஏனெனில், ஒருவர் தனது வாக்குறுதியை அளிப்பது மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் அந்த வாக்குறுதியைக் காக்கும் நோக்கில் செயல்படுவர். இதுவே, அந்த உறவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும். மேலும், இது எந்தவொரு சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம் என்பதையும் உணர்த்தக் கூடியதாக அமைகிறது. இந்த அற்புத தினமானது தம்பதிகளுக்கு உறுதியான வாக்குறுதியை அளிப்பதுடன், அதனை காத்து நடப்பவர்களுக்குமான தினமாக அமைகிறது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்