Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

12 லட்ச ரூபாயா.. ஷாக் கொடுத்த EB பில்.. செக்யூரிட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Sekar September 14, 2022 & 18:14 [IST]
12 லட்ச ரூபாயா.. ஷாக் கொடுத்த EB பில்.. செக்யூரிட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!Representative Image.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் ஒருவரின் வீட்டிற்கு மின்கட்டணமாக ரூ.12.26 லட்சம் விதித்த சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது. எப்படி இது நடந்தது?

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் (57) என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனை பார்த்துக் கொள்வதற்காக வீட்டிலேயே டிவி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். மேலும் இரவில் லாஸ்பேட்டையில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாகவும் பணிபுரிந்து வருகிறார். 

இதற்கிடையே மின்துறையை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவதால், கடந்த இரண்டு மாதங்களாக மீட்டர் ரீடிங் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்ட நிலையில், சரவணன் வீட்டுக்கு வழக்கமாக மாதந்தோறும் ரூ.800'க்குள் வரும் மின் கட்டணம் வரும் நிலையில், இந்த மாதம் மின் கட்டணமாக ரூ.12,26,944 வந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், உடனடியாக முத்தியால்பேட்டை மின்சார அலுவலகத்துக்கு சென்று இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில், மின்சார ரீடிங் 21,115 என்பதற்கு பதிலாக, தவறுதலாக கடைசியில் ஒரு பூஜ்ஜியம் கூடுதலாக சேர்த்துவிட்டதால் 2,11,150 என வந்துவிட்டதும் இதனால் தான் ரூ.12,26,944 பில் வந்ததும் தெரியவந்துள்ளது. 

அதே சமயம் தங்கள் பக்கம் நடந்த இந்த தவறை சரி செய்து கொடுப்பதாக மின்சாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு பூஜ்ஜியம் தவறுதலாக சேர்த்ததால், அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக இருப்பவருக்கு, லட்சங்களில் பில் வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்