Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எனக்கே விபூதி அடிக்க பாக்கிறியா.. ட்விட்டரை கைவிட்ட எலான் மஸ்க்.. அதிரடி அறிவிப்பு!!

Sekar July 09, 2022 & 08:24 [IST]
எனக்கே விபூதி அடிக்க பாக்கிறியா.. ட்விட்டரை கைவிட்ட எலான் மஸ்க்.. அதிரடி அறிவிப்பு!!Representative Image.

ட்விட்டர் நிறுவனம் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை குறித்து போதுமான தகவல்களை வழங்க தவறியதை அடுத்து, எலோன் மஸ்க் $44 பில்லியன் மதிப்பிலான ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பால் ட்விட்டர் நிறுவனம் அதிர்ச்சியடைந்தாலும், உடனடியாகப் பதிலடி கொடுத்து, ஒப்பந்தத்தை நிலைநிறுத்த டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் மீது வழக்குத் தொடரப்போவதாகக் கூறியுள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்துகிறார் என்பது உலகின் மிகப்பெரிய செய்தியாக சமீபத்தில் பார்க்கப்பட்ட நிலையில், இது தற்போது வேறு பாதையில் திரும்பியுள்ளது. மேலும் இது ஒரு நீண்ட சட்டப்போராகக் கூட மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் மஸ்க் செலுத்த ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதற்காக ஒப்புக்கொண்ட $1 பில்லியன் பிரிவினைக் கட்டணத்தை ட்விட்டர் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக, எலான் மஸ்க்கை வாங்க வைக்க போராடத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. அதை நிறுவனத்தின் இயக்குனர் குழுமமும் அங்கீகரித்துள்ளது மற்றும் சிஇஓ பராக் அகர்வாலும் கூட அதே எண்ணத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

ட்விட்டரின் குழுவிற்கு எழுதிய கடிதத்தில், மஸ்க் வழக்கறிஞர் மைக் ரிங்லர் தனது வாடிக்கையாளர் சமூக ஊடகத் தளத்தில் போலி அல்லது ஸ்பேம் கணக்குகளின் பரவலைத் தீர்மானிக்க கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தரவுகளை நாடியதாகவும், தற்போது வரை முறையான தரவுகள் வழங்கப்படவில்லை என்றும் புகார் கூறினார்.

இதற்கிடையே எலான் மஸ்க், ட்விட்டரின் வணிகம் மற்றும் நிதிச் செயல்பாட்டிற்கு இந்தத் தகவல் அடிப்படையானது என்றும், கையகப்படுத்துதலை முடிக்க இது அவசியம் என்றும் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ட்விட்டரின் குழுவின் தலைவர் பிரட் டெய்லர், மஸ்க்குடன் ஒப்புக்கொள்ளப்பட்ட விலை மற்றும் விதிமுறைகளின் படி பரிவர்த்தனையை முடிப்பதற்கு ட்விட்டர்  உறுதிபூண்டுள்ளது என்றும், இணைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்ட நடவடிக்கைகளைத் தொடர திட்டமிட்டுள்ளது என்றும் ட்வீட் செய்தார். 

டெலாவேர் கோர்ட் ஆஃப் சான்சரியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் கூறினார். டெலாவேரில் உள்ள விசாரணை நீதிமன்றம், ட்விட்டர் உட்பட பல நிறுவனங்களிடையே வணிக தகராறுகளை அடிக்கடி கையாளுகிறது.

இந்நிலையில் மஸ்கின் அறிவிப்பு வெளியான உடனேயே ட்விட்டரின் பங்குகள் 5% சரிவைக் கண்டது. அதே நேரத்தில் டெஸ்லாவின் பங்குகள் 2.5% உயர்ந்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்