Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஷின்சோ அபே சுடப்பட்டது ஷாக்கா இருக்கா.. ஜப்பானில் இதெல்லாம் சாதாரணமாம்.. இத பாருங்க!!

Sekar July 08, 2022 & 18:32 [IST]
ஷின்சோ அபே சுடப்பட்டது ஷாக்கா இருக்கா.. ஜப்பானில் இதெல்லாம் சாதாரணமாம்.. இத பாருங்க!!Representative Image.

ஜப்பானின் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக அறியப்படும் தேசியவாத சிந்தனை கொண்ட அரசியல்வாதியும் முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே, மேற்கு ஜப்பானின் நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

67 வயதான ஷின்சோ அபே, உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றான ஜப்பானில் மேல்சபைத் தேர்தலுக்கு முன்னதாக தனது உரையைத் தொடங்கிய சில நிமிடங்களில் பின்னால் இருந்து சுடப்பட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் அமைதியான நாடுகளில் ஒன்று என அறியப்படும் ஜப்பானில் இது நடந்துள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பலராலும் இப்படியொரு சம்பவத்தை கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியவில்லை.

ஆனால் ஜப்பானில் கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல்கள் நடப்பது வாடிக்கையாகவே இருந்து வந்துள்ளது. அப்படி கடந்த காலத்தில் நடந்த தாக்குதல்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

1990 ஆம் ஆண்டில், அப்போதைய நாகசாகி நகர மேயர் மோட்டோஷிமா ஹிட்டோஷி ஒரு வலதுசாரி ஆர்வலரால் சுடப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.

1992 இல், நாட்டின் டோச்சிகி மாகாணத்தில் ஆற்றிய உரையின் போது, ​​லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் அப்போதைய துணைத் தலைவர் கனேமாரு ஷின் மீது வலதுசாரி ஆதரவு துப்பாக்கி ஏந்திய ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இருப்பினும் கனேமரு அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பித்தார்.

1994 இல், முன்னாள் பிரதமர் ஹோசோகாவா மொரிஹிரோ டோக்கியோ ஹோட்டலில் வலதுசாரிக் குழுவின் முன்னாள் உறுப்பினரால் சுடப்பட்டார். இந்த சம்பவத்தில் ஹோசோகாவா காயமின்றி தப்பினார்.

தேசிய போலீஸ் ஏஜென்சியின் அப்போதைய கமிஷனர் ஜெனரல் குனிமட்சு தகாஜி 1995 இல் டோக்கியோவில் உள்ள அவரது இல்லத்தின் முன் சுடப்பட்டு பலத்த காயமடைந்தார்.

மற்றொரு நாகசாகி மேயரான இட்டோ இட்சோ, 2007 இல் ஒரு கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜப்பானில் துப்பாக்கி வன்முறை மிகவும் அரிதானது. உலகில் எங்கும் இல்லாத வகையில் கடுமையான துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இருந்தும் இந்த சம்பவம் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையி, நாட்டின் முக்கிய அரசியல்தலைவர்களுக்கு பாதுகாப்பை அதிகரித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்