Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அடுத்த துயரம்...கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 600 குடும்பங்கள் பாதிப்பு.!

madhankumar May 16, 2022 & 14:28 [IST]
இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அடுத்த துயரம்...கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 600 குடும்பங்கள் பாதிப்பு.!Representative Image.

இலங்கையில் மேற்கு பகுதியில் பெய்துள்ள கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட தகவலில், “கடந்த சில நாட்களாக இலங்கையின் மேற்கு மற்றும் தென் பகுதியில் கடுமையான மழை பதிவாகியிருக்கிறது. குறிப்பாக, கலுதரா மாகாணம், ரத்னபுரா மாவட்டங்களில் கடுமையான மழையினால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பலமாக வீசிய காற்றினால் 100கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதிற்கு கூட வழியில்லாமல் இருக்கின்றனர். இதனால் மக்கள் பெரிய போட்டடத்தில் ஈடுபட்டுள்ளனர். மகிந்த ராஜபக்சவின் வீடு உட்பட ஆளும் கட்சி தலைவர்களின் வீடு, அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஆளும் கட்சி எம்.பி. உட்பட இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

மக்களின் கடும் எதிர்பால் அந்த நாட்டின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷே பதவி விளக்கியுள்ளார். மேலும் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். ஆனாலும் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே பதவி விலகும் வரை எங்கள் போராட்டத்தை தொடருவோம் என இலங்கை மக்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டின் மேற்கு பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்