Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஊழியருக்கு தவறுதலாக 286 மடங்கு சம்பளம் கொடுத்த நிறுவனம்…! இது தான் டைம் என்று வேலையை ராஜினாமா செய்த ஊழியர்..! இதுல ட்விஸ்டே இது தான்…!

Gowthami Subramani June 28, 2022 & 18:05 [IST]
ஊழியருக்கு தவறுதலாக 286 மடங்கு சம்பளம் கொடுத்த நிறுவனம்…! இது தான் டைம் என்று வேலையை ராஜினாமா செய்த ஊழியர்..! இதுல ட்விஸ்டே இது தான்…!Representative Image.

சிலி நாட்டைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு தவறுதலாக அவருடைய சம்பளத்தின் 286 மடங்கு சம்பளத்தை நிறுவனம் கொடுத்துள்ளது. ஆனால், அந்த பணியாளர், ராஜினாமா செய்து காணாமல் போனார்.

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்று கடந்த மாதம் தற்செயலாக அவரது சம்பளத்தை விட 286 மடங்கு அதிகமான சம்பளத்தைக் கொடுத்துள்ளது. இந்த அதிகமான சம்பளம் பெற்ற அந்த நபர், அதிகமாக செலுத்திய தொகையை திருப்பி தருவதாக உறுதியளித்துவிட்டு தலைமறைவானர் எனக் கூறப்படுகிறது.

சிலி நாட்டில் குளிர் வெட்டுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது Consorcio Industrial de Alimentos (CIAL). இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியருக்கு தற்செயலாக 165,398,851 சிலி பெசோக்களை வழங்கியதாக சில உள்ளூர் ஊடகங்களில் கூறப்படுகிறது. அதன் படி, இது இந்திய மதிப்பில் ரூ.1.42 கோடியாகும்.

இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு அதன் ரெக்கார்டுகளைச் சரிபார்த்த போது, அந்த்ஹ நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியருக்கு மாதச் சம்பளத்தின் 286 மடங்கு கூடுதலாக அளிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளது. இது குறித்து, அந்த நிர்வாகம் அதிகமாக தொகை செலுத்தப்பட்ட ஊழியரிடம் பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுள்ளனர்.

இதற்கு அந்த தொழிலாளியும் கூடுதலாக பெற்ற தொகையை நிர்வாகத்திடம் திருப்பி தர ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் வெளிப்படையாக பணத்தைத் திருப்பிக் கொடுக்க விரும்பவில்லை. மேலும், இவர் பணியை ராஜினாமா செய்து பெறப்பட்ட தொகையை அவரிடமே வைத்துக் கொண்டுள்ளார்.

மேலும், அந்த நிர்வாகம் பணத்தை திரும்ப பெற முயன்ற போது, அவரிடம் இருந்து எந்தவித அறிவிப்பையும் பெறாததால், பணியாளரைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவர்களின் செய்திகளுக்கு பதிலளிக்காத அந்த ஊழியர், தான் அதிகமாக உறங்கி விட்டதாகவும், வங்கிக்கு சென்று பணத்தைச் செலுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், அவர் ஜூன் 2 ஆம் தேதி வேலையை ராஜினாமா செய்து விட்டு நிர்வாகத்திற்கு எந்தவித பதிலையும் அளிக்காமல் தலைமறைவாக உள்ளார் எனக் கூறப்பட்டு வருகிறது. தவறுதலாக செலுத்திய பணத்தை திரும்பித் தராததால், அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்