Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெல்லப்போவது யார்? ஓபிஎஸ் Vs ஈபிஎஸ் யாருக்கு தலைமைப் பொறுப்பு ?

UDHAYA KUMAR June 23, 2022 & 13:48 [IST]
வெல்லப்போவது யார்? ஓபிஎஸ் Vs ஈபிஎஸ் யாருக்கு தலைமைப் பொறுப்பு ?Representative Image.

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த ஓ பன்னீர் செல்வம் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அவர் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திகிறார்கள். ஆனால் உண்மையில் பொதுமக்கள் வெளியே நின்று வேடிக்கைத் தான் பார்க்கிறார்கள். ஜெயிக்கப்போவது யார் எடப்பாடி பழனிச்சாமியா அல்லது ஓ பன்னீர் செல்வமா என தொண்டர்களிடையே பேச்சும் எழுந்துள்ளது. 

அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வராக ஓ பன்னீர் செல்வம் பதவியேற்றார். டிசம்பர் 6, 2016ம் தேதி அவர் முதல்வரானார். ஆனால் சரியாக 71 நாட்களில் அவர் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்தார். இது பல நிர்பந்தங்களுக்கு பிறகு நடைபெற்ற நிகழ்வாகும். 

பின்னர் பல போராட்டங்களுக்குப் பிறகு கட்சி பிரிந்து சேர்ந்து இரட்டைத் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்று திமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தனர். இந்நிலையில், ரெட்டைத் தலைமையால் தாங்கள் சரியாக செயல்படாத நிலை இருப்பதாகவும், ஒற்றைத் தலைமை அதுவும் பழனிச்சாமி தான் தலைவராக இருக்க வேண்டும் என பல தொண்டர்கள் விரும்பியதாக கூறப்படுகிறது. 

அஇஅதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு துவங்குவதாக இருந்தது. அனைத்து தொண்டர்களும் வந்துவிட்ட நிலையிலும், ஓ பன்னீர்செல்வம் வந்து அறையில் அமர்ந்திருந்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்ததும் பன்னீர் செல்வமும் மேடைக்கு வந்தார். பொதுக்குழு கூட்டம் துவங்கியது. 

எடப்பாடி ஆதரவாளரான சி வி சண்முகம் மிக ஆவேசமாக இந்த தீர்மானங்கள் அனைத்தையும் பொதுக்குழு நிராகரிக்கிறது என கத்திக் கூறினார். 

தமிழ் மகன் உசேன் அதிமுகவின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இருந்தாலும் ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்து இல்லை எனவும் கூறப்படுகிறது. 

இந்த பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டிய தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிக்கவும், ஒற்றைத் தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகே இந்த தீர்மானங்கள் பற்றி பேச வேண்டும் என கூறிய நிலையில், அடுத்த பொதுக்குழு நிச்சயம் கூட்டப்பட வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை வைத்தனர். 

பொதுக்குழு உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் வரும் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என கூறியுள்ளார். 

இதையெல்லாம் பொதுக்குழுவில் பேசிக்கொண்டிருந்தபோது அதிருப்தியடைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையிலிருந்து எழுந்து சென்றனர். இதனை கண்டும் காணாமல் இருந்தனர் எடப்பாடி தரப்பினர். 

இப்போது அதிமுகவின் தலைமை யார்? ஓபிஎஸ் என்ன செய்வார்? டிடிவி தினகரனுடன் சேர்வாரா ஓபிஎஸ் உள்ளிட்ட பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். 

Keywords:

ops vs eps latest news, aiadmk general council meeting, o panneerselvam family, o panneerselvam twitter, o panneerselvam son, o panneerselvam daughter marriage, o panneerselvam contact number, o panneerselvam daughter name, ops age, ops daughter, edappadi k palaniswami twitter, mithun kumar edappadi k. palaniswami, edappadi k. palaniswami office address, edappadi palanisamy family, tamil nadu cm son, cm of tamil nadu 2021, edappadi palanisamy age,


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்