Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thiruvalluvar statue : கடலில் நடந்து செல்லலாம்..? திருவள்ளுவர் சிலையை காண புதிய பாலம்..!

Muthu Kumar [IST]
Thiruvalluvar statue : கடலில் நடந்து செல்லலாம்..? திருவள்ளுவர் சிலையை காண புதிய பாலம்..!Representative Image.

Thiruvalluvar statue : கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை மிதக்கும் பாலம் வழியாக நடந்து சென்று பார்க்கலாம்.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் திருவள்ளுவர் எழுதிய 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைக்கும் பணி 1990 செப்டம்பர் 6ம் தேதி தொடங்கப்பட்டு 2000 ஜனவரி 1ம் தேதி திறக்கப்பட்டது. இச்சிலை நிறுவபட்ட இடத்தின் அருகிலேயே விவேகானந்தர் பாறையும் அமைந்துள்ளது.

படகு சவாரி

கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு மிக எளிதாக படகில் செல்லலாம். இந்நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் பகுதியில் அடிக்கடி கடல் நீர்மட்டம் வெகுவாக குறைவதால், படகு கடல் பாறைகளில் தட்டும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவை அடிக்கடி ரத்து செய்யப்படும்.

கடல்சார் நடை பாலம்

இந்நிலையில், மக்கள் வருடத்தில் எல்லா நாட்களும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் விதமாக ஒரு திட்டம் போடப்பட்டுள்ளது. இதில், விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இடையே கடல்சார் நடை பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்க்கு 27.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாலம் அமைக்க உள்ள இடங்களை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்