Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இது அதையெல்லாம் விட ரொம்ப பெருசு.. மெகா ஊழல்.. திரிணாமுல் கட்சித் தலைவர் பரபரப்பு!!

Sekar August 05, 2022 & 14:42 [IST]
இது அதையெல்லாம் விட ரொம்ப பெருசு.. மெகா ஊழல்.. திரிணாமுல் கட்சித் தலைவர் பரபரப்பு!!Representative Image.

ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக அமலாக்க இயக்குனரகத்தால் விசாரிக்கப்பட்டு வரும் மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பைசாகி பானர்ஜி புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மேற்கு வங்கக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் (WBCUPA) பொதுச் செயலாளராகப் பணியாற்றிய பைசாகி பானர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தகுதியற்றவர்கள் நேரடியாகக் கல்வி நிறுவனங்களில் நுழைந்ததாகக் கூறினார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு ஆசிரியர் பணியும் விற்கப்பட்டதாகவும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு பற்றிய விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்தால், அது தற்போது வெளியாகியுள்ள மேற்கு வங்க பள்ளி ஆசியர் தேர்வு (West Bengal SSC Scam) ஊழலை விட ஒரு பெரிய மோசடியாக மாறிவிடும் என்றும் கூறினார்.

அப்போதைய கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி பணம் பெற்றுக் கொண்டு தகுதி குறைந்தவர்களுக்கு வேலை கொடுத்தார் என்று அவர் கூறினார். பார்த்தா சட்டர்ஜி தனக்கு கீழ் பணிபுரிபவர்கள ஊழல் செய்வதை அறிந்திருந்ததோடு, தானும் ஊழலில் ஈடுபட்டார் என அவர் மேலும் குற்றம் சாட்டையுள்ளார்.

"அவர் தனக்கு மேலே யாரையும் கருதவில்லை, மம்தா பானர்ஜியை கூட அவர் ஒரு பொருட்டாக கருதவில்லை. அவர் தனது பதவியை பல முறை தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் கல்வித் துறையை முழுமையாகக் கட்டுப்படுத்தினார்." என்று அவர் மேலும் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்