Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜிம் வொர்க் அவுட்… பிரபல நடிகர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்..!

Gowthami Subramani November 12, 2022 & 13:30 [IST]
ஜிம் வொர்க் அவுட்… பிரபல நடிகர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்..!Representative Image.

ஜிம்மில் வொர்க் அவுட் செய்து கொண்டிருந்த போது, பிரபல நடிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. அதன் படி, கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாள், புனித் ராஜ்குமார் அவர்கள் இவ்வாறே ஜிம் வொர்க் அவுட் செய்த சமயத்தில் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது டெல்லியைச் சேர்ந்த சின்னத்திரையில் பிரபல நடிகரான 46 வயதேயான சித்தாந்த் சூர்யவன்ஷி என்பவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது உயிரிழந்தார். இவர், கடந்த 2001 ஆம் ஆண்டு முதலே, பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்தார்.

இவர், 20க்கும் அதிகமான மெகா சீரியல்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் இடம்பெற்று, அனைவராலும் விரும்பப் படுபவராகத் திகழ்ந்தார். இவர், ரஷ்யாவைச் சேர்ந்த சூப்பர் மாடல் அழகியான அலேஷியா ராவத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சுருண்டு விழுந்த இவரை ஜிம்மில் இருந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் இவரின் உயிரைக் காப்பாற்ற தீவிரமாக போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம், திரையுலக பிரபலங்களிடையே அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாள்களாகவே, ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் சமயத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்படுவது வெளியாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்