Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல நடிகர் கத்தியால் குத்தி கொலை...திரையுலகில் அதிர்ச்சி சம்பவம்..!!

madhankumar June 18, 2022 & 19:40 [IST]
பிரபல நடிகர் கத்தியால் குத்தி கொலை...திரையுலகில் அதிர்ச்சி சம்பவம்..!!Representative Image.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர் சதீஷ் வஜ்ரா. இவருக்கு வயது 36. இவரின் திறமையான நடிப்பால் சின்னத்திரையைத் தொடர்ந்து நடிகர் சதீஷ் வஜ்ரா ‘லகோரி’ என்ற திரைப்படத்தில் துணை வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.

திருமணமான நடிகர் சதிஷ் வஜ்ராவுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துவந்துள்ளது. இதனிடையே அவரது மனைவி சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மறைந்த மனைவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சதீஷின் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர். அதிலும் குறிப்பாக சதீஷின் மைத்துனர் (மனைவியின் தம்பி) அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். தனது அக்கா மரணத்திற்கு சதீஷ்தான் காரணம் என்று அவர் மீது ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சதிஷ் வஜ்ராவை அவரது மைத்துனர் கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதனால் ரத்தவெள்ளத்தில் சதிஷ் உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெங்களூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பிரபல நடிகர் ஒருவர் தனது மைத்துனரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்