Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

11677 கோடிப்பூ.. வங்கிக் கணக்கில் தவறுதலாக விழுந்த 11 ஆயிரம் கோடி ரூபாய்... லாபம் பார்த்த நபர்!

UDHAYA KUMAR September 19, 2022 & 09:36 [IST]
11677 கோடிப்பூ.. வங்கிக் கணக்கில் தவறுதலாக விழுந்த 11 ஆயிரம் கோடி ரூபாய்... லாபம் பார்த்த நபர்!Representative Image.

தனது வங்கிக் கணக்கில் தவறுதலாக விழுந்த 11 ஆயிரம் கோடி ரூபாயை வைத்து சாமர்த்தியமாக 5 லட்சம் ரூபாய் லாபம் பார்த்துள்ளார் குஜராத்தைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர். 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் சாகர். பங்குச் சந்தையில் முதலீடு செய்து பிசினஸ் செய்து வருபவர்.  கடந்த 6 ஆண்டுகளாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு அடித்த அதிர்ஷ்டத்தைப் பாருங்கள். இவரது வங்கி கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது 11677 கோடி ரூபாய் பணம். 

இதுகுறித்த தகவல் தனக்கு வந்த நிலையில், எந்த வித பதற்றமும் கொள்ளாது அதிலிருந்து 2 கோடி ரூபாய் அளவுக்கு அப்படியே பங்குச்சந்தையில் பங்குகளை வாங்க முதலீடு செய்துள்ளார் ரமேஷ். அன்றைய தினத்தில் அவர் செய்த பங்கு வர்த்தகத்தில் 5 லட்சம் ரூபாய் அவருக்கு கிடைத்துள்ளது. 

இவை அனைத்தும் 8 மணி நேர இடைவெளியில் நடைபெற்றுள்ளது. தனக்கு கிடைத்த குறைந்த நேரத்திலேயே அவரால் 5 லட்சம் லாபம் பார்க்க முடிந்துள்ளது. அந்த 11 ஆயிரம் கோடி ரூபாயும் போட்டு பார்த்திருக்கலாமே என்கிறீர்கள் தானே...இதுதான் பேராசை என்பது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்