Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல நடிகை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

madhankumar August 06, 2022 & 14:46 [IST]
பிரபல நடிகை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!Representative Image.

பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே, இன்று பயங்கர கார் விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அமெரிக்க நடிகையான அன்னே ஹெச் (53), ‘அனதர் வேர்ல்ட்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்த தொடரில் விக்கி ஹட்சன் மற்றும் மார்லி லவ் என்ற இரட்டை வேடத்தில் நடித்தார், இது அவரது நடிப்பிற்காக பகல்நேர எம்மி விருது மற்றும் இரண்டு சோப் ஓபரா டைஜஸ்ட் விருதுகளை பெற்றது.

இந்நிலையில், நடிகை அன்னே ஹெச், லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் கார் மோதியதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அறிக்கையின்படி, 53 வயதான நடிகை நீல நிற மினி கூப்பர் காரை ஓட்டினார். அவர் தனது வாகனத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டின் மீது மோதுவதற்கு முன்பு ஒரு அடுக்குமாடி வளாகத்தின் கேரேஜ் மீது மோதியதாக கூறப்படுகிறது.

வீட்டின் மீது மோதியதில் அங்கு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது என கூறியுள்ளனர். ஆபத்தான நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறையின் துணை மருத்துவர்களால் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் போராடி முழுமையாக அணைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்