Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

World Food Safety Day: இன்றைய பாதுகாப்பான உணவு, நாளைய ஆரோக்கியமான வாழ்வு.... 

Nandhinipriya Ganeshan June 07, 2022 & 11:55 [IST]
World Food Safety Day: இன்றைய பாதுகாப்பான உணவு, நாளைய ஆரோக்கியமான வாழ்வு.... Representative Image.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் நாட்பட்ட உணவுப்பொருட்களால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை எல்லாம் தடுக்கவே இன்று ஜூன் 7ஆம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety Day) கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய காரணம் உணவுப்பழக்க வழக்கங்கள், உணவு பாதுகாப்பு போன்றவற்றை பற்றி விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதே ஆகும். என்னதான், கடைகளில் வாங்கி சாப்பிடும் பழக்கம் குறைந்துவிட்டாலும், வீட்டில் சமைக்கும் போதும் சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். ஏனெனில், வீட்டில் சமைக்கும் உணவு பொருட்களால் கூட பல விதமான தொற்றுகள் ஏற்பட வாய்ப்புண்டு. உங்க ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. எனவே, சமையலறையில் பெண்கள் கட்டாயம் இந்த வழிமுறைகளை பின்பற்ற (Food Hygiene Safety Tips Tamil) வேண்டும்.

சமையலறையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

சமையலறைக்குள் நுழையும் முன் சுத்தமாக கைகளை கழுவுதல்

காய்கறிகளை சுத்தமாக கழுவுதல்

சமைத்த, சமைக்காத உணவுகளை பிரித்து வைத்தல்

பழைய உணவுப்பொருட்களை அப்புறப்படுத்துதல்

உணவுப்பொருட்களை சரியான வெப்ப நிலையில் சமைத்து சாப்பிடுதல்

சத்துள்ள உணவுகளை சாப்பிடுதல் 

ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை திரும்ப பயன்படுத்துவதை தவிர்த்தல்

பச்சையாக உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தல்

ஒவ்வொரு முறை பாத்திரங்களை கழுவியதும், அந்த துளக்கும் நாரை வெயிலில் காய வைக்கவும்

இறைச்சிகளை நன்றாக வேகவைத்து சாப்பிடுதல்

தீங்கு விளைவிக்கும் இறைச்சிகளை தவிர்த்தல்

 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்