Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பிரியா மரணம் விவகாரம்...உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு...மருத்துவர்கள் மனு தாக்கல்!

Priyanka Hochumin November 18, 2022 & 13:15 [IST]
பிரியா மரணம் விவகாரம்...உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு...மருத்துவர்கள் மனு தாக்கல்!Representative Image.

கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான வழக்கில் பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது வெளியான தகவல் மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்த வியாசர்பாடியைச் சேர்ந்தவ பிரியா கால் பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வத்தோடு விளையாடி வந்தார். இவர் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று தனது திறமைகளைக் காட்டியுள்ளார். கடந்த சில நாட்களு முன்னர் தீராத மூட்டு வலி காரணமாக கொளத்தூர், பெரியார் நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டார். அதில் பிரியாவுக்கு வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகியிருப்பதாகத் தெரிவித்து அறுவை சிகிச்சை செய்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் பிரியாவின் காலில் வீக்கம் ஏற்பட்டு உணரியற்ற நிலைக்கு தள்ளப்பட்டார். உடனே அவர் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு இருப்பதைக் கண்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வலது காலை அகற்றினர். தவறான சிகிச்சையால் தனது வலது காலை இழந்த பிரியா சிகிச்சைப் பலனின்றி இரண்டு தினங்களுக்கு முன்பு உயிரழந்தார்.  

அஜாக்கிரதை காரணமாக பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். நீதிபதி ஜெகதீஷ்சந்திரா அமர்வு தலைமையில் இன்று விசாரணைக்கு வருகிறது. மருத்துவக் குழுவினர் விசாரணைக்கு ஆஜராக உள்ளதால் முன் ஜாமின் வழங்க வேண்டும். மேலும் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொள்வதாகவும், சாட்சியங்களை கலைக்க மாட்டோம் எனவும் மனுவில் மருத்துவர்கள் உத்திரவாதம் அளித்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ஜாமீன் வழங்குமா நீதிமன்றம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்