Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

30 ஆண்டு கால தியாகம்...மறைந்த ராணி எலிசபெத்திற்கு...ரிஹெர்சல் குயின் செய்த அந்த செயல்!

Priyanka Hochumin September 16, 2022 & 11:05 [IST]
30 ஆண்டு கால தியாகம்...மறைந்த ராணி எலிசபெத்திற்கு...ரிஹெர்சல் குயின் செய்த அந்த செயல்!Representative Image.

இந்தியாவில் மட்டும் அல்லாது உலக நாடுகளில் ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் நடக்க வேணுமெனில் அதற்கான ஒத்திகை நடைபெறும். அந்த வகையில் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்திற்காக சுமார் 30 ஆண்டு காலம் ஒத்திகை மேற்கொண்ட ரிஹெர்சல் குவியனாக வாழ்ந்த ஒருவரைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

பிரிட்டன் ராணி அவர்கள் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளில் ஒரு சின்ன பிசிறு கூட தவறு நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கவனாக இருந்தனர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். அப்படியாக எல்லா நிகழ்வுகளுக்கு முன்பும் ஒத்திகை மேற்கொள்வது வழக்கம். அப்படியாக 1966 ஆம் ஆண்டு முதல் ராணி எலிசபெத் அவர்களின் நடை, உடை, பாவனைகளில் அவரை போலவே ஒத்திகை மேற்கொள்பவர் தான் Ella Slack. இவர் இங்கிலாந்து நாட்டில் ஐல் ஆஃப் மேன் பகுதியில் வசித்து வருகிறார். இவர் BBC நிறுவனத்தில் பணி புரிந்து வந்த நிலையில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் கலந்து கொள்ள இருந்தார். அப்போது ஒத்திகை பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் அங்கு பணிபுரியும் Ella Slack-ஐ பார்த்து அப்படியே ராணி எலிசபெத் போலவே இருப்பதால் அவரையே ஒத்திகையை மேற்கொள்ள சொன்னார்.

பிறகு ராணியை போலவே உடையை மாற்றிய பிறகு உயரம், உடல் அளவு ஆகிய அனைத்திலும் பார்ப்பதற்கு ராணி எலிசபெத் போலவே இருந்ததால், அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு ராணியார் கலந்துகொள்ள வேண்டிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இவரே ஒத்திகை பார்க்க ஆரம்பித்தார். ராணி எலிசபெத் செய்வது போன்றே சேர்ட் வண்டி, காரில் இருந்து இறங்கி மக்களை நோக்கி காய் அசைப்பது, சிம்மாசனத்தில் உட்காருவது என்று அனைத்தையும் அப்படியே செய்துள்ளார். மேலும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நிகழ்ச்சிக்கும் இவரையே ஒத்திகை பார்க்க அழைத்துள்ளனர். இருப்பினும் அது ராஜ சிம்மாசனம் என்பதால் அதில் மட்டும் இவரை உட்கார அனுமதிக்கவில்லை.

ஆனால் இதை செய்வதற்கு Ella Slack எந்த சம்பளமும் வாங்கவில்லை. ராணி எலிசபெத் போன்று தோற்றம் இருப்பதால் தான் கை அசைக்கும் போதெல்லாம் மக்களும் தன்னை நோக்கி கை அசைத்து தங்களின் பாசத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த நாட்டை ஆளும் ராணிக்கு என்னால் செய்ய முடிந்த உதவி இது. இதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது, எங்கு வேறு எதுவும் தேவையில்லை என்று கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்