Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு ராஜதந்திரியை அநாகரீகமாகப் பேசுவதா? - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

Saraswathi Updated:
ஒரு ராஜதந்திரியை அநாகரீகமாகப் பேசுவதா? - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்Representative Image.

தமிழகத்திற்கு ராஜதந்திரமாக செயல்பட்டு  மத்திய அரசிடம் மக்களுக்கான திட்டங்களை பெற்றுத்தந்த எடப்பாடியாரை  அடிமை என்று நாகரீகம் இல்லாமல் பேசலாமா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், "ஜல்லிக்கட்டுக்கு பாராட்டு விழா என்கிற ஒரு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி வாய்க்கு வந்தபடி பேசியது  தெரிந்து பேசினாரா?, தெரியாமல் பேசினாரா? எழுதியதை பேசினாரா?, எழுதிக் கொடுத்ததை பேசினாரா? என்பது விவாதமாகியுள்ளது.  

அரசியல் ஜல்லிக்கட்டு வழியாக   2021 ஆண்டு தேர்தலில் அடிமைகளை விரட்டிவிட்டோம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலே அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம், என்று, தான் தமிழ் மக்களுடைய காவலர் போலவும், பலமுறை தமிழ் இனத்திற்காக போராட்டம் நடத்தி சிறை சென்றவர் போலும், தமிழ் மொழிக்காக பல போராட்டங்களிலே தன் சிறு வயது முதலே பங்கேற்றவர் போலவும், தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் செய்ததுபோலவும் உதயநிதி பேசி உள்ளார் .

தந்தை பெயரை சொல்லி, தாத்தா பெயரை சொல்லி புறவழியாக வந்தவர்தான் உதயநிதி ஸ்டாலின். புரட்சித்தலைவி அம்மாவு இருந்தவரைக்கும்  உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தினுடைய பார்வையாளராக தான் வர முடிந்ததேதவிர, அவர் சட்டமன்ற உறுப்பினராக முடியவில்லை என்கிற அந்த வரலாறையும் நினைத்து பார்த்து, அவர் அளவோடு, நாவடக்கத்தோடு, அரசியல் நாகரீகத்தோடு பேச வேண்டும் .என்பதுதான் இந்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். 

மோடிக்கும், ஈடிக்கும் பயப்பட மாட்டோம் என்று சொல்கிறீர்கள். இன்றைக்கு செந்தில் பாலாஜி என்கிற ஒற்றை நபருக்கு ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழகமும் திமுக குடும்பமும் அடிமையாக இருக்கிறதா? இல்லையா,?  செந்தில் பாலாஜி.ஈ டிவிசாரணையில், உங்களுக்கு இடி விழுந்துபோய் இருக்கிறதே என்று மக்கள் உங்களிடத்தில் திருப்பி கேட்கிறார்கள். 

செந்தில் பாலாஜியை பார்க்க அனைத்து அமைச்சரும் சென்றுவிட்டனர். ஆனால், ஒரே ஒரு அமைச்சர் மட்டும் போகவில்லை. அவர்தான் தன்மானமுள்ள அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன். அவர்தான் சொன்னார் 30 ஆயிரம் கோடியை உதயநிதியும்,சபரீஷனும் இன்றைக்கு எங்கே வைப்பது என்று திக்குதெரியாமல், திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.  அந்த ஆடியோ விவகாரம் இன்று வரைக்கும் சந்தி சிரிக்கிறதே. அதற்கு விளக்கம் கொடுக்க உதயநிதி ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா? 

நீங்கள் 5 முறை தமிழகத்தில் ஆட்சி செய்தபோது ,கொண்டுவராத எய்ம்ஸ் மருத்துவமனையை எடப்பாடியார் கொண்டு வந்தார் . நீங்கள் ஒரு செங்கலை காட்டி ஒரு செங்கல்கூட வைக்க முடியவில்லை என்று பிரச்சாரம் செய்த நீங்கள்,  ஒரு செங்கலைக்கூட தற்போது உங்களால் வைக்க முடிந்ததா?  

சாலைக்கட்டமைப்பு, மேம்பாலங்கள், மருத்துவக் கல்லூரி  போன்ற திட்டங்கள் எல்லாம்  எடப்பாடியார் மத்திய அரசிடம் ராஜதந்திரத்துடன் பெற்று தந்ததை அடிமை என்பதா? உங்கள் தாத்தா கலைஞருக்கு மதுரையில் நூலகத்தை கட்டி முடித்திருக்கிறீர்களே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நீங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள்? 

 தினந்தோறும் ஒரு கோடி மது பாட்டில் விற்பனை ஆகிறது. ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது என்று சொன்னால், நாள்தோறும் 10 கோடி ரூபாய், ஒரு மாதத்திற்கு 30 கோடி ரூபாய் என்ற அளவிலே இன்றைக்கு மாதத்திற்கு 300 கோடி ரூபாய் என்கிற அளவிலே அதுஉயர்ந்து வருடத்திற்கு 3600 கோடி என்கிற அளவிலே உயர்ந்திருக்கிற இந்த கணக்குகள் குறித்து  தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் சொல்லும் விளக்கம் என்ன?

ஜனநாயகத்தின் முகவரியாக இருக்கிற ஜனநாயகத்தின் விலாசமாக இருக்கிற அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் அடிமைகள் என்று சொல்வதை இன்றோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள்தான் அதற்கு பொருத்தமாக இருப்பீர்களே தவிர, நாங்கள் அல்ல.

இரண்டு கோடி தொண்டர்களின்ஒரே நம்பிக்கை எடப்பாடியார் .ராஜதந்திரத்தோடு காவிரி பிரச்சனை, முல்லை பெரியார் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம்,  அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு பெற 7.5 இட ஒதுக்கீடு தந்தார். இது எல்லாம் புரிந்து கொள்ளாமல்  அரசியல் நாகரீகம் இல்லாமல் பேசக்கூடாது". 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்