Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நோக்கம் நேர்மையாக இருந்தால் எந்த இலக்கையும் எட்ட முடியும்..! 102 மனதின் குரலில் பிரதமர் மோடி பேச்சு..!!

Saraswathi Updated:
நோக்கம் நேர்மையாக இருந்தால் எந்த இலக்கையும் எட்ட முடியும்..! 102 மனதின் குரலில் பிரதமர் மோடி பேச்சு..!!Representative Image.

இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்,  அனைத்து தரப்பினரும் இதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

பிரதமர் நரேந்திரமோடி வானொலி மூலம் நாட்டு மக்களுடன் பேசும் 102-வது ‘மனதின் குரல்’நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அதில் பேசிய பிரதமர் மோடி,  
 பிபர்ஜாய் அதிதீவிர புயலால் குஜராத்தின் கட்ச் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், அப்பகுதி மக்கள் மிகுந்த மனஉறுதியுடன் இதை எதிர்கொண்டனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்ட கட்ச் பகுதி, புயல் பாதிப்புகளில் இருந்தும் விரைவில் மீண்டெழும் என்றார்.

மேலும், தற்போது தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளதால், மழைநீரை சேமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  நமது நோக்கம் நேர்மையாக இருந்தால் எத்தகைய இலக்கையும் எட்டிப்பிடிக்க முடியும் என்று கூறிய பிரதமர் மோடி,  வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதகாவும்,  காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.

காசநோய் ஒழிப்பில் நிக்சய் மித்ரா என்ற அமைப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,  இந்த அமைப்பினர் ஆயிரக்கணக்கான காசநோயாளிகளை தத்தெடுத்து பராமரித்து வருவதாகவும், இதுவரை நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளை அந்த அமைப்பு தத்தெடுததுள்ளதாகவும்,  இந்த புண்ணியச் செயலுக்கு வித்திட்ட நிக்சய் மித்ராவின் 85,000 உறுப்பினர்களையும் பாராட்டுவதாகவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,  சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. உலகம் ஒரு குடும்பம் என்பதே இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் நடைபெறும் யோகா தின விழாவில் நான் பங்கேற்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் கண்டிப்பாக யோகாவை கடைபிடிக்க வேண்டுகிறேன். யோகாவுடன் இணையும்போது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
 
இவ்வாறு பிரதமர் பேசினார்.
 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்