Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துணை ஜனாதிபதியாக களமிறக்கப்படும் கேப்டன்.. பாஜக அதிரடி திட்டம்?

Sekar July 02, 2022 & 17:10 [IST]
துணை ஜனாதிபதியாக களமிறக்கப்படும் கேப்டன்.. பாஜக அதிரடி திட்டம்?Representative Image.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், துணை ஜனாதிபதி பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக முன்னிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

கடந்த ஆண்டு தான் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி காங்கிரஸுடனான தனது உறவை முறித்துக் கொண்ட முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தற்போது முதுகு அறுவை சிகிச்சைக்காக லண்டனில் உள்ளார். முன்னதாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி சிங்கிடம் பேசினார்.

வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 19-ம் தேதி கடைசி நாளான நிலையில், இந்த முக்கிய அரசியல் சாசன பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறுகிறது. தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.

முன்னதாக கேப்டன் அமரீந்தர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே லண்டனில் இருந்து திரும்பியதும் கேப்டனின் கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் பாஜகவுடன் இணையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் லோக் காங்கிரஸில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்றாலும், இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் பாஜக மூத்த தலைவர் ஹர்ஜித் சிங் கிரேவால் கூறினார்.

லண்டனுக்குச் செல்வதற்கு முன், சிங் தனது கட்சியை பாஜகவுடன் இணைக்கும் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார், முன்னாள் முதல்வர் அவர் திரும்பியதும் இணைப்பை அறிவிப்பார் என்று கிரேவால் கூறினார்.

பஞ்சாபின் பாட்டியாலா அரச குடும்பத்தைச் சேர்ந்த கேப்டன் அமரீந்தர் சிங் பஞ்சாபின் முதல்வராக இரண்டு முறை இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்