Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வடக்கன்ஸ் அட்ராசிட்டி....தோனி பெயரை சொல்லி நூதன மோசடி.!

madhankumar August 10, 2022 & 18:25 [IST]
வடக்கன்ஸ் அட்ராசிட்டி....தோனி பெயரை சொல்லி நூதன மோசடி.!Representative Image.

நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் பலவிதமான மோசடிகளை பற்றி தெரிந்துகொண்டுதான் உள்ளோம் அந்தவகையில் தற்போது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்த கூடிய வகையில் மோசடி ஒன்று நடந்துள்ளது.

நாம் அனைவரும் இது போன்ற ஒரு சூழலை சந்தித்திருப்போம், அதாவது வடமாநில இளைஞர்கள் வங்கியில் இருந்து அழைப்பது போல நமது செல்போனிற்கு அழைப்பு விடுத்தது "சார் உங்க கார்டு மேல உள்ள நம்பர் சொல்லு சார்" என கேட்பார்கள் அது போல தான் இந்த மோசடியானது நடந்துள்ளது. 

தற்போது கார்டு மேல இருக்குற நம்பர் யாரும் சொல்ல மறுக்கிறார்கள் என்பதற்காக, சிறிது அட்வான்ஸாக சென்று முகநூலில் உங்கள் நண்பர்கள் யாரேனும் ஒருவரின் கணக்கை போலவே போலி கணக்கு ஒன்றை தொடங்கி நண்பர் ப்ரொபைலில் வைத்திருக்கும் புகைப்படத்தை போலவே அந்த கணக்கிற்கும் வைத்து உங்களுக்கு மெசேஜ் மூலம் தொடர்பு கொண்டு எனக்கு சிறிது பணம் தேவை படுகிறது, இப்பொது தாருங்கள் உங்களை நேரில் சந்திக்கும்போது கொடுத்துவிடுகிறேன் என கூறி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்களும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

அப்படி பட்ட மோசடி கும்பல் ஒன்று குபீர் என சிரிப்பை வரவழைக்கும் அளவிற்கு மோசடியில் ஈடுபட்டுள்ளது. அது வேற ஒன்னும் இல்லைங்க, நமது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் வீரருமான தோனியின் பெயரை வைத்து இந்த மோசடியானது நிகழ்ந்துள்ளது. ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு பெரிய அளவிலான மோசடி எல்லாம் இல்லை வெறும் ஐநூறு ரூபாய் தான்.

அதாவது அவரின் பெயரில் போலியான முகநூல் கணக்கு ஒன்றை தொடங்கி எனக்கு அவசரமாக ஒரு 500ருபாய் வேண்டும் இந்த வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள்... நான் உண்மையாகவே தோனி தான் நீங்கள் நம்பவில்லை என்றால் இது தான் எனது புகைப்படம் என கூறி இணையதளத்தில் இருந்து தோனியின் புகைப்படத்தை டவுன்லோட் செய்து அனுப்பியிருக்கிறார்கள். 

இதை பார்த்த நமது நெட்டிசன்கள் அதனை வைத்து கலாய்த்து வருகிறார்கள். ஆசியாவில் மிகப்பெரிய பணக்கார கிரிக்கெட் வீரராக இருக்கும் தோனி எதற்காக வெறும் 500ரூபாய் கேட்டு மெசேஜ் செய்ய போகிறார் உங்க அக்கப்போருக்கு ஒரு அளவு இல்லையா? இதை சிறிய குழந்தை கூட நம்பாது என கூறிவருகின்றனர். மேலும் இதனை காமெடியாக நினைத்து தவிர்த்து விடாமல் உடனே நடவடிக்கை எடுங்கள் என காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்