Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விநாயகர் சதுர்த்தி.. இதையெல்லாம் செய்யக் கூடாது.. அரசு உத்தரவு!!

Sekar August 21, 2022 & 11:18 [IST]
விநாயகர் சதுர்த்தி.. இதையெல்லாம் செய்யக் கூடாது.. அரசு உத்தரவு!!Representative Image.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு :- 

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலால் செய்யப்படாத விநாயகர் சிலைகளை மட்டுமே நீரில் கரைக்க வேண்டும்.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

சிலைகளின் ஆபரணங்களை தயாரிக்க உலர்ந்த மலர்கள் மற்றும் வைக்கோலையும், பளபளப்பிற்காக மரங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை பிசினையும் பயன்படுத்தலாம்.

சிலைகளுக்கு வர்ணம் பூச இயற்கையான சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் எதுவும் பயன்படுத்த கூடாது.

விநாயகர் சதுர்த்தியை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு அனைவரும் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்