Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குப்பையில்லா குமரி... நடைபயணம் மேற்கொண்ட அமைச்சர்...

Baskaran. S Updated:
குப்பையில்லா குமரி... நடைபயணம் மேற்கொண்ட அமைச்சர்...Representative Image.

கன்னியாகுமரி: இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்தில் குப்பையில்லா குமரியை உருவாகுவோம் என்ற முழுக்கத்துடன் குலசேகரத்தில், கொட்டும் மழையில் நனைந்தபடி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வாக்கத்தான் மேற்கொண்டார்.       

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்தில் குப்பையில்லா குமரியை உருவாகுவோம் என்ற  நோக்கத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெகிழி பயன்பாட்டை முற்றிலும் ஒழித்ததோடு,  வீடுகள் தோறும் உருஞ்சு குழிகள் அமைத்து குப்பையில்லா குமரியாக மாற்றப்பட்டு வருகிறது. 

இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் "குப்பையில்லா குமரி" மக்கள் இயக்கமாக மாறுவோம் என்னும் தலைப்பில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி குலசேகரத்தில் நடைபெற்றது. குலசேகரரம் கான்வென்ட் சந்திப்பில் இருந்து துவங்கி மணலிவிளை, இட்டகவேலி வழியாக கல்லடி மாமூடு சந்திப்பில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நடை பயணம் மேற்கொண்ட அமைச்சர் வீடுகள் தோறும் ஆய்வு மேற்கொண்டு உறுஞ்சு குழிகள் அமைத்து குப்பையில்லா குமரியை உருவாக்க வேண்டும் என கேட்டு கொண்டார். நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் கவுசிக், ஒன்றிய செயலாளர் ஜான்சன், மாவட்ட துணை செயலாளர் ராஜு, துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், பேரூர் செயலாளர் ஜெபித் ஜாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்