Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு தடை.. சமூக வலைதளங்களுக்கு பறந்தது உத்தரவு?

Sekar Updated:
மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு தடை.. சமூக வலைதளங்களுக்கு பறந்தது உத்தரவு?Representative Image.

பிபிசி ஆவணப்படமான “இந்தியா: மோடி கேள்வி”யின் முதல் அத்தியாயத்தை வெளியிட்ட பல யூடியூப் வீடியோக்களைத் தடை செய்வதற்கான வழிமுறைகளை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட யூடியூப் வீடியோக்களின் இணைப்புகளைக் கொண்ட 50 க்கும் மேற்பட்ட ட்வீட்களைத் தடை செய்யவும் ட்விட்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஐடி விதிகள், 2021 இன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி நேற்று தகவல் மற்றும் ஒளிபரப்புச் செயலாளரால் இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. யூடியூப் மற்றும் ட்விட்டர் இரண்டும் அரசின் வழிகாட்டுதல்களை ஏற்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிபிசி தயாரித்த ஆவணப்படம், இதற்கு முன்னர் இந்திய உள்துறை அமைச்சகத்தால் உண்மைத் தன்மை இல்லாத மற்றும் காலனித்துவ மனநிலையை பிரதிபலிக்கும் ஒரு பிரசாரப் பகுதி என்று நிராகரிக்கப்பட்டது. 

இதையடுத்து வீடியோ பிபிசியின் இந்தியா தளத்தில் கிடைக்காத நிலையில், சில யூடியூப் சேனல்கள் இந்தியாவுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை விளம்பரப்படுத்துவதற்காக பதிவேற்றியதாகத் தெரிகிறது. யூடியூப் தனது தளத்தில் மீண்டும் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டால் அதைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மற்ற தளங்களில் வீடியோவின் இணைப்பைக் கொண்ட ட்வீட்களைக் கண்டறிந்து தடுக்கவும் ட்விட்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்