Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

9 மாதம் வேண்டாம்.. இனி 6 மாதம் போதும்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Sekar July 06, 2022 & 18:46 [IST]
9 மாதம் வேண்டாம்.. இனி 6 மாதம் போதும்.. மத்திய அரசு அறிவிப்பு!!Representative Image.

மத்திய சுகாதார அமைச்சகம், கொரோனா முன்னெச்சரிக்கையாக போடப்படும் பூஸ்டர் டோஸ்களுக்கான இடைவெளியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போதுள்ள 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாகக் குறைத்துள்ளது.

முன்னர் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) நிலையான தொழில்நுட்ப துணைக் குழு (STSC) கொரோனா தடுப்பூசிகளின் இரண்டாவது மற்றும் முன்னெச்சரிக்கை பூஸ்டர் டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை தற்போதைய ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க பரிந்துரைத்ததிருந்தது.

இந்த பரிந்துரையின் மீது சுகாதார அமைச்சகம் விரைவில் இறுதி முடிவை எடுக்கும் என்று அவர்கள் முன்னர் தெரிவித்த நிலையில், தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, அரசு ஆலோசனைக் குழு வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) ஆய்வின் கண்டுபிடிப்புகளை மதிப்பாய்வு செய்தது. முதன்மை தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும் கோவிட் தடுப்பூசியில் இருந்து வேறுபட்ட கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளிடையே சிஎம்சி மருத்துவக் கல்லூரி ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குழு உறுப்பினர்கள் பூஸ்டர் ஷாட்களுக்கான மிக்ஸிங் டோஸ்களின் முடிவுகளில் சீரான தன்மை இல்லாததைக் கண்டறிந்தனர். இதனால் வேறுபட்ட கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பரிந்துரை செய்ய முடியாது என்று கூறினர்.

நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) கூட்டத்தில் குரங்கு காய்ச்சலின் அச்சுறுத்தல் மற்றும் தடுப்பூசியின் தேவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இருப்பினும், நாட்டில் குரங்கு காய்ச்சலின் எந்த ஒரு பாதிப்பும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதால் தற்போதைய நிலையில், வலுவான கண்காணிப்பு மட்டுமே தேவை என்று உறுப்பினர்கள் கருதினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்