Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த கருமத்தை தூக்கத்தான் இவ்வளவு சிரமப்படியா?...அசால்டாக டெட்லிஃப்ட் செய்த பாட்டி..!

madhankumar May 23, 2022 & 14:34 [IST]
இந்த கருமத்தை தூக்கத்தான் இவ்வளவு சிரமப்படியா?...அசால்டாக டெட்லிஃப்ட் செய்த பாட்டி..!Representative Image.

சாதனைகள் புரிவதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை மூதாட்டி ஒருவர் நிரூபித்துள்ளார். அதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது இணையத்தில் வைரலாகிவரும் ஒரு வீடியோவில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆண்களே தூக்க சிரமப்படும் டெட்லிஃப்ட் (பளு தூக்குதல்) கம்பியை அசால்டாக தூக்கி அசத்தியுள்ளார். இதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த பாட்டியின் பேரன் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். பின்னர் கம்பியை கீழே இறக்குவதற்கு பாட்டியின் பேரன் உதவுவது போல் அந்த வீடியோ உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இது போன்ற ஒரு காட்சி விக்ரம் நடித்த "தூள்" படத்தில் வரும் அதாவது, விவேக் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது அங்கு வரும் பறவை முனியம்மா " இந்த கருமத்தை தான் ராத்திரி புல்லா உக்காந்து ஓட்டிட்டு இருந்தியா?" என கூறி வெயிட் லிஃப்ட் கம்பியை அசால்டாக தூக்கி எரிந்து விட்டு செல்வார். அதனை இந்த வீடியோ நினைவு படுத்துகிறது. 

இணையத்தில் வைரலாக பரவிவரும் இந்த வீடியோ பஞ்சாபி இண்டஸ்ட்ரி எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இதனை 6ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்