Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

குவஹாத்தி - நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் ரயில்: கிளம்பும் நேரம், வந்தடையும் நேரம், டிக்கெட் விலை எல்லா விவரமும்..!| Guwahati - New Jalpaiguri Vande Bharat Train

Priyanka Hochumin Updated:
குவஹாத்தி - நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் ரயில்: கிளம்பும் நேரம், வந்தடையும் நேரம், டிக்கெட் விலை எல்லா விவரமும்..!| Guwahati - New Jalpaiguri Vande Bharat TrainRepresentative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே 'வந்தே பாரத் திட்டம்' என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, Wifi வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. 

மே 29, 2023 அன்றிலிருந்து இந்தியாவின் 18வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை குவஹாத்தி முதல் நியூ ஜல்பைகுரி வரை இயக்கப்படுகிறது. இந்த பதிவில் குவஹாத்தி - புதிய ஜல்பைகுரி வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிபரங்களை பார்க்கலாம். 

வழி: 

இந்த ரயில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படுகிறது. குவஹாத்தியில் இருந்து நியூ ஜல்பைகுரி செல்லும் இந்த ரயில் காமாக்யா, நியூ போங்கைகான், கோக்ரஜர், நியூ அலிபுர்துவார் மற்றும் நியூ கூச்பெஹார் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். குவஹாத்தி - நியூ ஜல்பைகுரி [409 கி.மீ தூரம்] மற்ற ரயில்கள் 6.30 மணி நேரம் எடுத்துக் கொண்டால், வந்தே பாரத் வெறும் 5.30 மணி நேரத்தில் சென்றுவிடுகிறது.

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

குவஹாத்தி - நியூ ஜல்பைகுரி [எண்: 22228]

 

நியூ ஜல்பைகுரி - குவஹாத்தி [எண்: 22227]

மே 29, 2023

செவ்வாய்க்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயங்கும்

409 கிமீ

5.30 மணி நேரம்

04.30 PM - 10.00 PM

 

06.10 AM – 11.40 AM

 

நியூ ஜல்பைகுரி - குவஹாத்தி வந்தே பாரத் ரயில் நேர அட்டவனை [எண்:22227]:

மறுமார்க்கமாக நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து காலை 06.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11.40 மணிக்கு குவஹாத்தி வந்தடையும்.

நியூ ஜல்பைகுரி - குவஹாத்தி [எண்: 22227]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

நியூ ஜல்பைகுரி

-

06.10 AM

நியூ கூச்பெஹார்

07.35 AM

07.36 AM

நியூ அலிபுர்துவார்

07.50 AM

07.51 AM

கோக்ரஜர்

08.40 AM

08.41 AM

நியூ போங்கைகான்

09.13 AM

09.14 AM

காமாக்யா

11.18 AM

11.20 AM

குவஹாத்தி

11.40 AM

-

 

குவஹாத்தி - நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை [எண்:22228]: 

தினமும் மாலை 4.30 மணிக்கு குவஹாத்தியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 04.40 மணிக்கு காமாக்யா சந்திப்பையும், மாலை 06.35 மணிக்கு நியூ போங்கைகான் சந்திப்பையும், மாலை 06.56-க்கு கோக்ரஜரையும், இரவு 07.48-க்கு நியூ அலிபுர்துவாரையும், இரவு 08.02- க்கு நியூ கூச்பெஹாரையும் சென்றடையும். பின்னர், இரவு 08.03 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.00 மணிக்கு நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.

குவஹாத்தி - நியூ ஜல்பைகுரி [எண்: 22228]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

குவஹாத்தி

-

04.30 PM

காமாக்யா

04.40 PM

04.42 PM

நியூ போங்கைகான்

06.35 PM

06.36 PM

கோக்ரஜர்

06.56 PM

06.57 PM

நியூ அலிபுர்துவார்

07.48 PM

07.49 PM

நியூ கூச்பெஹார்

08.02 PM

08.03 PM

நியூ ஜல்பைகுரி

10.00 PM

-


கட்டணம்: 

AC chair car-ன் விலை ரூ.1,225/- மற்றும் Executive chair car-ன் விலை ரூ.2,205/- என IRCTC இணையதளம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்