Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை..! இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Saraswathi Updated:
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை..! இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! Representative Image.

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில்  230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டும் பணிகளுக்கு கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.  

தரைதளம் உட்பட  6 அடுக்களுடன்  இந்த மருத்துவமனையானது 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர்பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 1000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில், இதயம், நுரையீல்,நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்படவுள்ளன.  
புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு ஏ-பிளாக்கிலும்,  பி - பிளாக்கில் அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவும்,  சி - பிளாக்கில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளும் அமைக்கப்பட்டள்ளன.  

"கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.  ஆனால், குடியரசுத் தலைவர் வெளிநாடு பயணம் மேற்கொண்டதால் ஜூன் 15-ம் தேதி(இன்று) குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதாக பின்னர் அறிவிப்பு வெளியாகி, திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவந்தது.  

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் நேரம் ஒதுக்காததால், ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை"யை திறந்துவைக்கவுள்ளார்.  றப்பு விழாவையொட்டி, மருத்துவமனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்