Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கற்பழிக்கப்பட்ட மைனர் பெண்...சிசுவை கலைக்க நீதிமன்றம் எதிர்ப்பு! | Gujarat High Court Abortion Case

Priyanka Hochumin Updated:
கற்பழிக்கப்பட்ட மைனர் பெண்...சிசுவை கலைக்க நீதிமன்றம் எதிர்ப்பு! | Gujarat High Court Abortion Case Representative Image.

குஜராத் நீதிமன்றத்தில் கற்பழிக்கப்பட்ட மைனர் பெண் குழந்தை கர்ப்பமாக உள்ளார். அவரின் பெற்றோர்கள் வயிற்றில் வளரும் சிசுவை கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கையை முன் வைத்தனர்.

இவர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி சமீர் டேவ், அந்த காலகட்டத்தில் 17 வயதிற்கு முன்பே பெண்கள் திருமணம் செய்து குழந்தையை பெற்றெடுத்தனர். பொதுவாக ஆண்களை காட்டிலும் பெண்கள் சீக்கிரம் முதிர்ச்சியடைகின்றனர். நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருப்பதால் 18 வயதிற்கு முன்னர் குழந்தை பெற்றெடுக்கும் நிலை இருப்பதால் பயம், கவலை, அதிர்ச்சியடைகிறோம் என்று கூறினார்.

மேலும் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளதால், தற்போது ராஜ்கோட் மருத்துவமனையில் இருந்து மகளிர் மருத்துவம் துறையில் இருக்கும் மருத்துவர்கள் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு ஆசிஃபிகேஷன் [ossification]  சோதனை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினர். மேலும் அந்த பெண்ணின் மனநிலை சீராக இருக்கிறதா என்று மனநல மருத்துவரிடம் அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார். அதில் அந்த பெண் நல்ல படியாக குழந்தை பெற்றெடுக்க முடியும் என்றால் கருக்கலைப்பை இந்த நீதிமன்றம் அனுமதிக்காது என்று தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்