Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,052.97
-436.02sensex(-0.60%)
நிஃப்டி21,857.25
-138.60sensex(-0.63%)
USD
81.57
Exclusive

கேள்வித்தாள் கசிவு.. கடைசி நேரத்தில் போட்டித்தேர்வு ரத்து..!!

Sekar Updated:
கேள்வித்தாள் கசிவு.. கடைசி நேரத்தில் போட்டித்தேர்வு ரத்து..!!Representative Image.

கேள்வித் தாள் கசிவு காரணமாக, இன்று திட்டமிடப்பட்டிருந்த ஜூனியர் கிளார்க் பணிக்கான குஜராத் அரசின் போட்டித் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தகவலின்படி, குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) இந்த விவகாரத்தில், வதோதராவில் இருந்து இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மாநிலம் முழுவதும் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை 2,995 மையங்களில் நடைபெற இருந்த 1,181 பதவிகளுக்கான தேர்வுக்கு சுமார் 9.5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக மாநில பஞ்சாயத்து தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

"ஜூனியர் கிளார்க் (நிர்வாகம்/கணக்கியல்) தேர்வு ஜனவரி 29 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை வெவ்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட இருந்தது. இன்று அதிகாலை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, அவர்கள் சில சந்தேக நபர்களை கைது செய்து கேள்வியின் நகலை கைப்பற்றினர்." என்று வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேர்வர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், தேர்வு நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் மாநில பஞ்சாயத்து தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றும், அதற்காக வாரியம் புதிய விளம்பரத்தை வெளியிடும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தேர்வுத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக குஜராத் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் இசுதன் காத்வி மாநிலத்தில் உள்ள பாஜக அரசாங்கத்தை கடுமையாக சாடினார். குஜராத்தில் பல போட்டித் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால், அந்த மாநிலத்தில் இளைஞர்களின் பரவலான கிளர்ச்சிக்கு வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்