Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கை, கால்களை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத நபர்..! யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை.. | Suraj Tiwari Cracks Civil Services

Gowthami Subramani Updated:
கை, கால்களை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத நபர்..! யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை.. | Suraj Tiwari Cracks Civil ServicesRepresentative Image.

சுராஜ் திவாரி என்பவர், ரயில் விபத்து ஒன்றில் தனது கை, கால்களை இழந்த நிலையில் இருந்தார். இருந்தாலும், மனம் தளராது 2022 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார்.

ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெறுவதற்கு, சிவில் சர்வீஸ் தேர்வாளர்கள் மிக அதிக அளவில் முயற்சி செய்வர். இந்த தேர்வில் மெயின்புரியில் வசிக்கக் கூடிய சூரஜ் திவாரி என்பவர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளவர். இவர், ரயில் விபத்து காரணமாக தனது இரண்டு கால்கள் மற்றும் வலது கையை இழந்தார். மேலும், இடது கையின் இரண்டு விரல்களையும் இழந்தார். ஆனால், அவரது இயலாத காரணத்தை அவரது வெற்றிக்குத் தடையாக இருக்க விடவில்லை.

இவர், கடந்த 2017 அன்று காஜியாபாத்தின் தாத்ரியில் ரயில் விபத்தில் சிக்கி, இந்த விளைவு ஏற்பட்டது. இது குறித்து அவரது தந்தை ரமேஷ் குமார் திவாரி பேட்டி அளித்ததில், சூரஜின் வெற்றி குறித்து ஆழ்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், தன் மகனின் மூன்று விரல்களே போதும் என்பதை பெருமிதத்துடன் கூறினார். மேலும், இவரது மகன் மிகவும் தைரியமானவன் என்றும், வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் கடினமாக உழைத்திருப்பதாகவும் சூரஜின் தாய் அவர்கள் கூறியுள்ளார். இது சூரஜிற்கும், அவர்களது குடும்பத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்