Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்துக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்.. இதென்ன புது கோரிக்கையா இருக்கு?

Sekar July 09, 2022 & 15:54 [IST]
இந்துக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்.. இதென்ன புது கோரிக்கையா இருக்கு?Representative Image.

ஹரியனாவின் மானேசர் கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் அங்குள்ள உள்ளூர் இந்து அமைப்புகள் கூட்டிய ஒரு மகாபஞ்சாயத்தை தொடர்ந்து, ஹம்தார்ட் லேபாராட்டரிஸி டம், அவர்களின் தொழிற்சாலையில் உள்ள 50 சதவீத வேலைகளை இந்துக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுனானி மருந்து நிறுவனமான ஹம்தார்ட் லேபாராட்டரிஸ் வேலைவாய்ப்பு வழங்குவதில் ஒருசார்பாக நடந்துகொள்வதாக குற்றம் சாட்டிய மகாபஞ்சாயத்து, இந்து விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு, அறக்கட்டளையாக இருப்பதற்காக அரசாங்கத்திடம் இருந்து அனைத்து தள்ளுபடிகளையும் பெற்றபோதும், நிலம் கொடுத்த ​​உள்ளூர் இந்துக்கள் யாரையும் பணியமர்த்தவில்லை எனத் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி நிர்வாகத்திடம் இட ஒதுக்கீடு கேட்டு ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்து, அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனினும் தங்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தர மறுத்தால் ஆலையை மூடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

“மனேசர் விவசாயிகளாகிய நாங்கள் இந்தத் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக எங்கள் நிலங்களை விட்டுக் கொடுத்துள்ளோம். ஹம்தார்டில் காலியிடங்கள் உள்ளன. ஆனால் எந்த உள்ளூர்வாசியும் வேலைக்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம், திறமையும் தகுதியும் இருந்தபோதிலும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. நிர்வாகம் யூனிட்டைப் பார்வையிட்டு, அவர்களிடம் இந்து தொழிலாளர்கள் யாரும் இல்லை என்பதை ஏன் என்று பார்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமாவதர் கூறினார்.

உள்ளூர்வாசியும் விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினருமான டேவிந்தர் கூறுகையில், இந்த ஆலையில் பணியாளர்கள் பணியமர்த்தல் மற்றும் சுயவிவரத்தில் தங்களுக்கு முழுமையான விசாரணை தேவை என்றார். இதற்கிடையில், மனேசர் டிசிபி மஹ்வீர் சிங் கூறுகையில், மகாபஞ்சாயத்துக்குப் பிறகு அப்பகுதியில் நிலைமை முற்றிலும் இயல்பாக உள்ளது என்று கூறினார்.

இதற்கிடையில், நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, அச்சுறுத்தல்களை விளம்பர ஸ்டண்ட் என்று நிராகரித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்